- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு ரொம்ப பிடிச்ச ஹீரோ அவர்தான், அந்த படம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் - பல...

எனக்கு ரொம்ப பிடிச்ச ஹீரோ அவர்தான், அந்த படம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் – பல ஆண்டுகளுக்கு பின் நடிகை சிம்ரன் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 1990களில் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். குறிப்பாக பம்மல் கே சம்மந்தம் வசூல் ராஜா எம்பிபிஎஸ் கண்ணுப்படப் போகுதய்யா வாலி அவள் வருவாளா அரசு துள்ளாத மனமும் துள்ளும் பிரியமானவளே என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார்.

நடிப்பில் மட்டுமின்றி சிம்ரன் சிறந்த நடனக் கலைஞர். பல படங்களில் அவரது நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக நேருக்கு நேர் பிதாமகன் எதிரும் புதிரும் யூத் போன்ற படங்களில் சிம்ரனின் நடனம் வேற லெவலில் இருக்கும். தொட்டு தொட்டு பேசும் சுல்தானா, ஆல்தோட்ட பூபதி நானடா போன்ற பாடல்கள் இப்போதும் டிரண்டிங்கில் இருக்கின்றன.

- Advertisement -

பிதாமகன் படத்தில் சூர்யாவுடன் பொன்மகள் வந்தாள் பாடலுக்கு சிம்ரனின் நடனம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதே போல் இடையழகி சிம்ரன் என்ற சிறப்பு பெயரும் அவருக்கு உண்டு. இடுப்பை நளினமாக அசைத்து ஆடி ரசிகர்களின் மனதை கொண்டவர் சிம்ரன். எப்போதுமே ஒல்லியாக காணப்படும் அவரை ஸ்லிம்ரன் என்றும் சில ரசிகர்கள் அழைக்கின்றனர்.

துவக்கத்தில் நாயகியாக மட்டுமே நடித்த சிம்ரன் சமீபகாலமாக நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த அவர், சீமராஜா படத்தில் வில்லி கேரக்டரில் நடித்திருந்தார். இப்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் டூரிஸ்ட் பேமிலி படத்தில் சிம்ரன் நடிப்பு பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

- Advertisement -

முதன்முறையாக நடிகர் சசிக்குமாருக்கு இந்த படத்தில் நடிகை சிம்ரன் ஜோடியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அபார வெற்றியை பெற்றிருக்கிறது. ரூ. 51 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது. சிம்ரனுக்கு இந்த படம் இன்னும் பல பட வாய்ப்புகளை பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை சிம்ரன் கூறியதாவது, நான் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். அத்தனை நடிகர்களில் எனக்கு ரொம்பவும் பிடித்த ஹீரோ விஜய்தான். அவருடன் நடித்த படங்களில் எனக்கு துள்ளாத மனமும் துள்ளும் படம்தான் மிகவும் பிடித்த படம் என்று நடிகர் சிம்ரன் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இதை விஜய் ரசிகர்கள் வரவேற்று சிம்ரனுக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்