- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்படி நடிக்கிறதுக்கா 30 லட்சம் ரூபாய் சம்பளம்? - மகன் பிரபுவை கலாய்த்த நடிகர் திலகம்...

அப்படி நடிக்கிறதுக்கா 30 லட்சம் ரூபாய் சம்பளம்? – மகன் பிரபுவை கலாய்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!

- Advertisement -

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எப்போதுமே தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களை அவ்வப்போது கிண்டல் கேலி செய்து விடுவார். அது மிகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கும். நடிப்பு பல்கலை கழகமாக விளங்கிய நடிகர் திலகம் யாரை வேண்டுமானாலும் சட்டென கிண்டல் செய்து விடுவார். ஒருமுறை தனது மகன் பிரபுவையே அவர் கலாய்த்திருக்கிறார்.

இதுகுறித்து காமெடி நடிகர் காதல் சுகுமார் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது, வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடிக்கும் போது பிரபு சாரை அடிக்கடி நோண்டி நோண்டி சிவாஜி சாரை பற்றி சொல்லுங்க சொல்லுங்க என்று கேட்டுக் கொண்டே இருப்பேன்.

அவரும் சளைக்காமல் சிவாஜியை பற்றி என்னிடம் பேசிக் கொண்டே இருப்பார். தன்னுடைய அப்பா அவரை கிண்டல் செய்ததை கூட அவ்வளவு ரசித்து சொல்வார். கடந்த 1988ம் ஆண்டு வரை தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்த நடிகர் திலகத்தை, 92ம் ஆண்டு தேவர் மகன் படம் வரும் வரை 4 வருடங்கள் இடைவெளி கொடுத்தது.

அப்போது 91ம் ஆண்டு வந்த சின்னத்தம்பி பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அப்போது சிவாஜி ஐயா வீட்டுக்கு தயாரிப்பாளர்கள் படையெடுத்து வந்தனர். அப்படி வீட்டுக்கு வருபவர்களை பார்த்து சிவாஜி கணேசன், வாங்க வாங்க என்ன கதை? எனக்கு என்ன கேரக்டர்? என்று கேட்டிருக்கிறார். அப்போது அவர்கள், ஐயா நாங்கள் சின்னவர் பிரபுவை பார்க்க வந்திருப்பதாக சொல்வது வாடிக்கையாக நடந்திருக்கிறது.

ஒரு முறை கையில் மஞ்சள் பையில் பணத்துடன் வந்திருந்த இயக்குனர் தயாரிப்பாளர் இருவரை பார்த்தும் அதே கேள்வியை சிவாஜி கேட்க, அவர்கள் பிரபுவுக்கு அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் கொடுக்க வந்தோம் என்று கூறியிருக்கின்றனர். அப்போ, ஓ நடிகரை பார்க்க வந்திருக்கீங்களா? மேல மாடியில் இருக்கார் போங்க என்று சொல்லி இருக்கிறார். அவர்கள் இருவரும் மாடிப்படி ஏறி போகையில், சசர் ஒரு நிமிஷம். அவருக்கு சம்பளமா படத்துக்கு எவ்வளவு கொடுக்கறீங்க என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அவர்கள் 30 லட்சம் ரூபாய் கொடுக்கிறோம் என்று சிவாஜியிடம் கூறியதும், ஒரு வினாடி யோசித்த சிவாஜி, ஒரே மாதிரி நடிக்கிறதுக்கா 30 லட்சம்? என்று ஆச்சரியமாக அதிர்ச்சியாக கேட்டிருக்கிறார் அதைச் சொல்லி பிரபு வாய்விட்டு சிரித்து இருக்கிறார். இந்த தகவலை காதல் சுகுமார் தனது முகநூல் பதிவில் வெளியிட்டுள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது மகன் பிரபுவையே, ஒரே மாதிரி நடிக்கிறார் என்று விமர்சனம் செய்திருப்பது கவனிக்கத்தக்கது.

சற்று முன்