- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல அரசியல் தலைவரை சூப்பர் ஸ்டார் என்று கூறிய நடிகர் தம்பி ராமையா… அப்செட் ஆன...

பிரபல அரசியல் தலைவரை சூப்பர் ஸ்டார் என்று கூறிய நடிகர் தம்பி ராமையா… அப்செட் ஆன ரஜினி ரசிகர்கள் – ஒருவேளை காமெடியா பேசியிருப்பாரோ?

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகர் தம்பி ராமையா. இவர் நடிகர் வடிவேலு நடித்த பல காமெடி காட்சிகளில் வடிவேலு உடன் இணைந்து நடித்து காமெடி செய்திருக்கிறார். பல படங்களுக்கு ஸ்கிரிப்ட் ரைட்டர் ஆகவும் தம்பி ராமையா இருந்திருக்கிறார். காமெடி நடிகராக மட்டுமின்றி குணச்சித்திர நடிகராகவும் அவர் பல படங்களில் அசத்தியிருக்கிறார்.

தம்பி ராமையா சிறந்த நடிகர் மட்டுமல்ல, இயக்குனர் பாடலாசிரியர் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். குறிப்பாக நடிகர் வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தை இயக்கியவர் நடிகர் தம்பி ராமையா தான். ஆனால் அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

- Advertisement -

ஆக்சன் கிங் நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவை, தம்பி ராமையாவின் மகன் உமாபதி காதல் திருமணம் செய்து கொண்டார். இருதரப்பு பெற்றோர் சம்மதத்துடன் இந்த திருமணம் சில மாதங்களுக்கு முன் அர்ஜூன் சொந்தமாக கட்டிய கோவிலில் மிகவும் விமரிசையாக நடந்தது. நடிகர் அர்ஜூனும் நடிகர் தம்பி ராமையாவும் சம்பந்திகள் என்பதும் குறிப்பிடத்தக்கது,

இந்நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறித்து நடிகர் தம்பி ராமையா பேசிய வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பிரபல அரசியல் தலைவரான வைக்கா குறித்து நடிகர் தம்பி ராமையா பேசியதாவது, வைகோ சினிமாவில் மட்டும் கால் பதித்திருந்தால் இந்த நாட்டின் ஒரே சூப்பர் ஸ்டார் ஆக இருந்திருப்பார்.

- Advertisement -

அவர் கண் புருவத்திற்கு குரலுக்கு கம்பீரத்திற்கு அவர் மூக்கின் அழகுக்கு வைகோ தவிர வேறு யாரும் சூப்பர் ஸ்டார் ஆக இருந்திருக்க முடியாது. அவர் சினிமாவுக்கு வந்திருந்தால் அமிதாப்பச்சனை ஓரம்கட்டி இருப்பார். ஆனால் அவர் தேர்ந்தெடுத்த துறை அரசியல். ஒருமுறை மேடைக்கு வந்து பேசும்போது ஒரு மணி நேரத்துக்கு மேலாக கையில் சிறு குறிப்பு கூட இல்லாமல் வைகோ பேசிய பேச்சு அந்த விழாவில் கலந்து கொண்டிருந்த ரஜினிகாந்தையே வியக்க வைத்துவிட்டது.

இன்று அவரது பரிணாம வளர்ச்சியாக தான் தம்பி துரை வைகோவை பார்க்கிறேன். அவர் நான் பெரியாரையும் வணங்குவேன், பெருமாளையும் வணங்குவேன் என்கிறார். இதுதான் பரிணாம வளர்ச்சி. வாழ்க்கையை நெறிப்படுத்துவது, முறைப்படுத்துவது எல்லாம் ஆன்மீகம் தான் என்று தம்பி ராமையா அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். ஏற்கனவே விஜய் சூப்பர் ஸ்டார் என்று பேசி பெரிய சர்சசையானது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் என்று வைகோவை தம்பி ராமையா கூறியிருப்பது ரஜினி ரசிகர்களை அப்செட் செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்