- Advertisement -
Homeபொழுதுபோக்குவெங்கட்பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் விஜய் 68 படத்தில் ஒரு விஜய் கேரக்டர் இதுதானாம் -...

வெங்கட்பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் விஜய் 68 படத்தில் ஒரு விஜய் கேரக்டர் இதுதானாம் – அப்போ பாலிடிக்ஸ் பன்ச் டயலாக் இருக்குதா ப்ரோ?

- Advertisement -

லியோ படத்தை தொடர்ந்து, விஜய் தற்போது தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இதையடுத்து, கடந்த 2 வாரங்களாக தாய்லாந்து நாட்டில் நடந்தது. படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு, நேற்றுதான் விஜய் சென்னை திரும்பி இருக்கிறார். படக்குழு நாளை தமிழகம் திரும்புகிறது.

நடிகர் விஜய் இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் விஜய் 69 படத்தில் நடிப்பது ஏறக்குறைய முடிவாகி விட்டது. அரசியலுக்கு முன்னோட்டமாக அந்த படத்தின் கதை இருப்பதால், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இந்த படம் முத்தாய்ப்பாய் இருக்கும் என கூறப்படுகிறது.

- Advertisement -

நடிகர் விஜய், குறிப்பிட்ட காலம் வரை ஒரே மாதிரியான படங்களில், ஒரே மாதிரியான தோற்றத்தில் நடித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. அது உண்மையும்தான். அதனால் சமீபமாக தனது படங்களில் தனது கெட்டப் மற்றும் உடைகள், கேரக்டர்களில் அதிக கவனம் செலுத்துகிறார் விஜய்.

அந்த அடிப்படையில்தான், லியோ படத்தில் பார்த்திபன் கேரக்டரில் அப்படி ஒரு விக்கும், தாடியும் வைத்து நடுத்தர வயது குடும்பஸ்தராக தனது கேரக்டரை வெளிப்படுத்தினார் விஜய். அது, வழக்கமான விஜயை விட இது மிக சிறப்பான தோற்றமாக ரசிகர்களுக்கு பிடித்திருந்தது.

- Advertisement -

அதே போல் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் விஜய் 68 கேரக்டர்களும் அப்பா மகன் என இரண்டு விதமாக உள்ளது. இதில் அப்பா கேரக்டருக்கு சிநேகாவும், மகன் விஜய்க்கு மீனாட்சி சவுத்ரியும் நடிக்க உள்ளனர். பிரசாந்த், பிரபுதேவா, மோகன் உள்ளிட்ட முக்கிய பிரபல நடிகர்கள் நடிக்கும் இந்த படம் ஆக்சன் பிலிம் என்றுதான் கூறப்படுகிறது.

இப்போது விஜய் 68 படம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. அது, இந்த படத்தில் ஆண்டி ஹீரோ அதாவது, வில்லத்தனமாக கேரக்டரில் ஒரு விஜய் நடிக்கிறார். ஆனால் அவர் அப்பாவா, மகனா என்பது தெரியவில்லை. எனினும் பிரியமுடன், அழகிய தமிழ் மகன் படங்களில் விஜய் வில்லனாக ஏற்கனவே நடித்தவர்தான். அதனால், இந்த படத்திலும் அந்த கேரக்டரில் கலக்குவார். குறிப்பாக அரசியல் சார்ந்த பன்ச் டயலாக்குகள் இருக்கவும் அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

சற்று முன்