- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்படி ஒரு சம்பவம் எங்கள் தரப்பில் நடந்திருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் - மகன் சூர்யாவுக்காக வெளிப்படையாக...

அப்படி ஒரு சம்பவம் எங்கள் தரப்பில் நடந்திருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் – மகன் சூர்யாவுக்காக வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி!

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். கடந்தாண்டில் அவர் நடித்த மகாராஜா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு முக்கியமான படமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் படம் படுதோல்வியை சந்தித்தது.

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் அதிகமாகி விட்டனர். நடிகர்கள் கார்த்திக் பிரபு துவங்கி அவர்களது மகன்கள் கௌதம் ராம் கார்த்திக் விக்ரம் பிரபு நடிக்க வந்துவிட்டனர். அதே போல் முரளி மகன் அதர்வா மற்றும் ஆகாஷ் சத்யராஜ் மகன் சிபிராஜ் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் தம்பி ராமையா மகன் உமாபதி சிவக்குமார் மகன்கள் சூர்யா கார்த்தி என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

- Advertisement -

அதே போல் சில முன்னணி நடிகைகளின் மகள்களும், மகன்களும் சினிமாவில் நடித்து வருகின்றனர். விரைவில் நடிகைகள் குஷ்பு மகள், தேவயானி மகள் போன்றவர்களும் திரையில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வரிசையில் இப்போது நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதியும் நடிக்க வந்துவிட்டார்.

ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்குனராக பீனிக்ஸ் என்ற படத்தில் அறிமுகமாகி உள்ளார். அவர் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதி மகன் சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படம் நாளை திரைக்கு வர இருக்கிறது. ஏற்கனவே ஒருமுறை பேசிய சூர்யா, என் அப்பா வேறு நான் வேறு என்று பேசியது இணையத்தில் வைரலானது.

- Advertisement -

இப்போது சமீபத்தில் நடந்த ஒரு பிரமோ நிகழ்ச்சியில், நடிகர் சூர்யா சேதுபதி மிகவும் ஆடிடிட்யூட் ஆக நடந்துக்கொண்டது பெரிய அளவில் இணையத்தில் சர்ச்சை ஆனது. வாயில் பபிள்கம் போன்ற எதையோ மென்றபடி அவர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தது, பெரிய அளவில் விமர்சனத்தில் சிக்கியது. அவரது உடல் மொழி தெனாவெட்டாக இருப்பதாக பலரும் புகார் எழுப்பினர்.

இந்நிலையில் அந்த வீடியோக்களை இணையத்தில் இருந்து நீக்குமாறு விஜய் சேதுபதி, அவரது மகன் சூர்யா தரப்பில் இருந்து மிரட்டல் வந்ததாகவும் புகார் எழுந்தது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி இதுகுறித்து கூறுகையில், எங்கள் தரப்பில் இருந்து யாருக்காவது அழைப்பு வந்திருந்தால், மிரட்டல் செய்திருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், என்று விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்