- Advertisement -
Homeபொழுதுபோக்குஓடிடிக்கு அரசு வைத்தது செக். இனி இதை எல்லாம் ஸ்ட்ரிக்டா பாலோ பன்னாட்டி கண்டிப்பா நடவடிக்கை...

ஓடிடிக்கு அரசு வைத்தது செக். இனி இதை எல்லாம் ஸ்ட்ரிக்டா பாலோ பன்னாட்டி கண்டிப்பா நடவடிக்கை இருக்கும் என அரசு அறிவிப்பு

- Advertisement -

திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை சென்சார் போர்டு சான்றிதழ் பெற்றுத்தான் வெளியிட முடியும். அது மட்டுமல்லாது அந்த திரைப்படத்தில் எதாவது சமூகத்திற்கு ஆபத்து விளைவிக்க கூடியவாறான காட்சிகளோ அல்லது நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்ககூடிய காட்சிகளோ இடம்பெற்றுள்ளதாக சென்சார் போர்டு அமைப்பினர் கூறினால் அவர்கள் கூறும் மாற்றங்களையும் நிச்சயம் செய்தே ஆகவேண்டும். அப்போதுதான் அந்த படம் வெளியாகும். இவ்வாறு பல விதிமுறைகள் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு உண்டு.

ஆனால் ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கோ அல்லது வெப் சீரீஸ்களுக்கோ அவ்வாறான எந்த விதிமுறைகளும் இல்லை. ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் எந்த திரைப்படங்களுக்கும் வெப் சீரீஸ்களுக்கும் சென்சார் போர்டு சான்றிதழ் அவசியமில்லை.

- Advertisement -

இதில் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு மேற்கூறியவற்றை தாண்டி கூடுதலாக ஒரு விதிமுறை உண்டு. அதாவது திரைப்படங்களில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றாலோ அல்லது மது அருந்துதல் போன்ற காட்சிகள் இடம்பெற்றாலோ அந்த காட்சிகளின் கீழே எச்சரிக்கை வாசகங்கள் நிச்சயமாக இடம்பெற வேண்டும். ஆனால் ஓடிடி தளத்திற்கு அந்த விதிமுறைகளும் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில்தான் தற்போது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது ஓடிடியில் நேரடியாக வெளியாகும் திரைப்படங்களிலோ அல்லது வெப் சீரீஸ்களிலோ புகைப்பிடிப்பது, புகையிலை உட்கொள்வது, மது அருந்துவது, போதை பொருட்களை பயன்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெறும்போது கண்டிப்பாக எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் அதில், ஓடிடி தளங்களில் ஒரு திரைப்படம் அல்லது வெப் சீரீஸ் தொடங்கும் முன்பு 30 வினாடிகள் ஓடக்கூடிய புகையிலை எச்சரிக்கை வீடியோவும் கண்டிப்பாக இடம்பெறவேண்டும் என்ற விதியையும் ஓடிடி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலன் அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்