தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக நடிகர்களில் ஒருவராக விஜய் சேதுபதி இருந்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான தலைவன் தலைவி படத்துக்கு பிறகு சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ள படம் பக்தா. பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து படம் அதிக கவனத்தை பெற்றுள்ளது.
பத்தா படத்தை தொடர்ந்து மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி நடித்து அடுத்து வெளிவரும் அவரது படங்கள் குறித்த லேட்டஸ்ட் லைன் அப் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். பேட்ட படத்துக்கு பின் ரஜினியுடன் 2வது முறையாக இந்த படத்திலும் நடித்துள்ளார்.
அடுத்து விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த பாக்கெட் நாவல் என்ற படம் வெளிவர உள்ளது. இந்த படத்தை இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா டைரக்ட் செய்திருக்கிறார். அடுத்து இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு என்ற படமும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக உள்ளது.
அதேபோல் டைரக்டர் மிஷ்கின் இயக்கிய விஜய் சேதுபதி நடித்த ட்ரெயின் படமும் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி சாய் பல்லவி நடித்த இஞ்சி வெல்லம் ஆகிய படங்களும் ரிலீஸ்க்கு தயாராக உள்ளன. அத்துடன் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஒரு பெயரிடப்படாத புதிய படத்தில் விஜய் சேதுபதி நடித்த கமிட் ஆகியுள்ளார். இப்போது நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெற்றிமாறன் டைரக்ட் செய்து வரும் அரசன் படத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கமிட் ஆகி உள்ளார். அதேபோல் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா 2 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். ஏற்கனவே மகாராஜா படம் வெளியாகி மாஸ் ஹிட் ஆன நிலையில் அதன் 2ம் பாகமும் உருவாக உள்ளது.
மேலும் விடுதலை விடுதலை 2 படங்களை தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் ஒரு புதிய படம் உருவாக உள்ளது. அத்துடன் இயக்குனர் பாலா இயக்கத்தில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் ஒரு படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் ஒரு லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. இதன்படி மொத்தம் 13 படங்கள் வரை விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து அடுத்த படங்கள் உருவாகும் நிலையில் சில படங்கள் அதில் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன, சில படங்கள் ஷூட்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





