விடுதலை விடுதலை 2 படங்களை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அரசன். நடிகர் சிலம்பரசன் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். கலைப்புலி தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஆண்ட்ரியா யோகேஸ்வரி கிஷோர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
பொங்கலுக்கு சில வாரங்களுக்கு முன்பு கோவில்பட்டியில் அரசன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடந்தது. இதில் நடிகர் சிலம்பரசன் பங்கேற்று நடித்தார். முதல் ஷெட்யூல் முடிவடைந்த நிலையில் இப்போது 2வது ஷெட்யூல் படப்பிடிப்பு சென்னையில் வரும் பிப்ரவரி மாதம் 2வது வாரத்தில் துவங்க உள்ளது.
இதற்காக சென்னையில் பிரமாண்ட ஷெட்டுகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதற்கிடையே அரசன் படத்தில் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி கமிட் செய்யப்பட்டு இருந்தார். ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை விடுதலை 2 படங்களில் நடித்தவர் விஜய் சேதுபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் இப்போதைய லேட்டஸ்ட் தகவலின்படி அரசன் படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகி விட்டார். இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்கிற உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் கடந்த 15 நாட்களாக விஜய் சேதுபதி கால்ஷீட்டுக்காக படக்குழு காத்திருந்த நிலையில் அவரால் கால்ஷீட் தர முடியவில்லை என்று கூறப்படுகிறது.
நடிகர் விஜய் சேதுபதி பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு மொழி படங்களில் நடிக்கிறார். இதுதவிர வெப் சீரிஸ்களிலும் அவர் நடிக்கிறார். விளம்பர படங்களில் நடிப்பது மட்டுமின்றி கடந்த 4 மாதங்களாக விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சிகளையும் அவர் வாரந்தோறும் தொகுத்து வழங்கும் பணியிலும் ஈடுபட்டார்.
இத்தகைய காரணங்களால் கால்ஷீட் சொதப்பல் ஏற்பட்டதால் அரசன் படத்துக்கு அவரால் கால்ஷீட் தர முடியவில்லை. அதனால் அவர் அரசன் படத்தில் இருந்து விலகிய நிலையில் அவரது கேரக்டரில் நடிக்க பாகுபலி வேட்டையன் படங்களில் வில்லனாக நடித்த தெலுங்கு நடிகர் ராணா டகுபதி கமிட் செய்யப்பட்டுள்ளார். இனி விஜய் சேதுபதிக்கு பதிலாக அவர்தான் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.





