- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென கடவுளின் குழந்தையாக மாறிய நடிகர் விஷால் - மகுடம் ரிலீஸ் குறித்து அவர் வெளியிட்ட...

திடீரென கடவுளின் குழந்தையாக மாறிய நடிகர் விஷால் – மகுடம் ரிலீஸ் குறித்து அவர் வெளியிட்ட பதிவில் கனவு நிறைவேறியதாக பெருமிதம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். மேலும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு நடிகர் அர்ஜூன் இயக்கிய சில படங்களில் உதவி இயக்குனராக விஷால் இருந்தவர்.

ரவி அரசு இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த மகுடம் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களிலேயே தடைபட்டது. படத்தின் இயக்குனருக்கும் விஷாலுக்கும் பிரச்சனை உருவானது. அதன்பிறகு இயக்குனர் அனல் அரசு அந்த படத்தை விட்டு வெளியேறிய நிலையில், மகுடம் படத்தை விஷாலே முதல்முறையாக இயக்கி ஹீரோவாக நடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தில் நடிகைகள் அஞ்சலி துஷாரா விஜயன் மற்றும் ஜான்விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். நடிகர் விஷால் இயக்குனராக பணி செய்து உருவாக்கிய மகுடம் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இதுகுறித்து மகுடம் படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் விஷால் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, நான் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டேன். நான் விஷால். கடவுளின் பிள்ளை.

சவால்கள் அதிகமாக அதிகமாக நான் இன்னும் உயர்ந்து நிற்பேன். ஏனெனில் தயக்கமோ வெட்கமோ இன்றி என்னால் கண்ணாடியை பார்த்து நிற்க முடியும். நான் எனது வேலையை மன உறுதியோடும் விடாமுயற்சியுடன் மனப் பலத்தோடும் செய்கிறேன். திரையுலகிலும் சமூகத்திலும் இன்று நான் என்னவாக இருக்கிறேனோ அதற்கு காரணமான எனது அன்பிற்குரிய ரசிகர்களை கடவுளுக்கு நிகராகவே கருதுகிறேன்.

- Advertisement -

அவர்களுக்காக ஒரு நடிகனாக எனது கடமையை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன். எனது 35 ஆண்டுகால கனவு இன்று நனவாகி உள்ளது. மகுடம் திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக இயக்குனராக உங்கள் அனைவரின் முன்பு வந்து நிற்கிறேன். என் பணியை முடித்து விட்டேன்.

உலகளாவிய திரையரங்க வெளியீட்டின் மூலம் உங்களிடம் மகுடம் படத்தை கொண்டு வந்து சேர்த்து விட்டேன். காட்சிகள் தொடங்கின. கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று அந்த பதிவில் நடிகர் விஷால் கூறியிருக்கிறார். மகுடம் படம் இன்று வெளியான நிலையில் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்