- Advertisement -
Homeபொழுதுபோக்குஆன்லைன் வன்மம் அதிகமாகி விட்டது, தயவு செய்து என் படத்தை அரசியலாக்காதீங்க - நடிகர் விஷ்ணு...

ஆன்லைன் வன்மம் அதிகமாகி விட்டது, தயவு செய்து என் படத்தை அரசியலாக்காதீங்க – நடிகர் விஷ்ணு விஷால் ஆவேசம்!

- Advertisement -

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் கட்டா குஸ்தி. இந்த படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாகவும் ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாகவும் நடித்திருந்தனர். இந்த படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு இப்போது கட்டா குஸ்தி 2 படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் வசூலையும் குவித்து வருகிறது.

முதல் பாகத்தைப் போலவே கட்டாகுஸ்தி இரண்டாம் பாகத்திலும் நடிகர் விஷ்ணு விஷால் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். சமீபத்தில் கட்டாகுஸ்தி 2 படம் ரோட்டரி கிளப் ஏற்பாட்டில் சிறப்பு குழந்தைகளுக்கு ஸ்பெஷலாக திரையிட்டு காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் விஷ்ணு விஷால் கலந்து கொண்டார்.

- Advertisement -

அப்போது நடிகர் விஷ்ணு விஷால் கூறியதாவது, என்னுடைய படத்துக்கு எதிராக ஆன்லைன் வன்மம் அதிகமாக இருக்கிறது. அதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். இந்த முறை அதற்கு எதிராக நான் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து களத்தில் நின்றேன். இனிமேலும் நிற்பேன்.

யாரோ ஒருவரை தனிப்பட்ட முறையில் குறிவைத்து தாக்குவது சமூகத்திற்கு நல்லதல்ல. இந்த படத்தை ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டு இருப்பதால் தயவு செய்து இதை யாரும் அரசியலாக மாற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் ரெட் ஜெயிண்ட் மூவி நிறுவனத்தை ஒரு சிறந்த தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாக மட்டும்தான் பார்க்கிறேன்.

- Advertisement -

கடந்த 13 ஆண்டுகளாக எனக்கு அவர்களுடன் பழக்கம் இருந்து வருகிறது. அவர்களுடனான என்னுடைய அனுபவம் என்பது எப்போதுமே அழகானதாகவும் அன்பானதாகவும் இனிமையானதாகவுமே இருந்திருக்கிறது. அதனால் தான் கட்டா குஸ்தி 2 திரைப்படத்தை அவர்கள் மூலமாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.

என் சினிமா வாழ்க்கையில் 13 ஆண்டுகளாக எனக்கு துணையாக இருந்தவர்களுடன் இணைந்து ஒரு நல்ல திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நினைத்தேன். அதைத்தான் இப்போது நான் செய்திருக்கிறேன். இதை அனைவரும் பாசிட்டிவாக அணுக வேண்டும் என்று விரும்புகிறேன். கட்டா குஸ்தி 2 திரைப்படமே மிகவும் பாசிட்டிவாக இருப்பதால்தான் குடும்பம் குடும்பமாக வந்து தியேட்டரில் பார்த்து மக்கள் கொண்டாடுகிறார்கள் என்று நடிகர் விஷ்ணு விஷால் அந்த நிகழ்ச்சியில் ஆவேசமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்