- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனியும் என்னால் பேசாமல் இருக்க முடியாது - தோனியை கடுமையாக விமர்சித்த பிரபல நடிகர்!

இனியும் என்னால் பேசாமல் இருக்க முடியாது – தோனியை கடுமையாக விமர்சித்த பிரபல நடிகர்!

- Advertisement -

கிரிக்கெட் விளையாட்டு என்பது உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கிய விளையாட்டாக உள்ளது. அதிலும் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்குதான் அதிகளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பாக இந்திய அணியை ரசிகர்கள் எப்போதுமே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.

கபில்தேவ் கவாஸ்கர் காலம் துவங்கி முகமது அசாருதீன் சச்சின் டெண்டுல்கர் ஜடேஜா வினோத் காம்பிர் மகேந்திர சிங் தோனி விராத் கோலி ரோகித் சர்மா என காலம் காலமாக இன்று வரை ரசிகர்கள் கிரிக்கெட் நட்சத்திரங்களை கொண்டாடி வருகின்றனர். அதிலும் தோனியை தல என்று அழைக்கும் ரசிகர்கள், அவரது புகழ் பாடுகின்றனர்.

- Advertisement -

இப்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் எனப்படும் சிஎஸ்கே அணியும் தொடர்ந்து விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடந்த 5 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி மிக மோசமான தோல்வியை சந்தித்திருக்கிறது. அதிலும் சேப்பாக்கத்தில் நடந்த நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி மிகவும் பலவீனமாக ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

20 ஓவர்களில் மொத்தமே 103 ரன்கள் என மிக மோசமான ரன் ஸ்கோரை சிஎஸ்கே அணி எடுத்திருந்தது. 8 விக்கெட்டுகள் மற்றும் 59 பந்துகள் மீதம் இருக்கும்போதே எதிரணி இந்த ஸ்கோரை எடுத்து வெற்றி பெற்றது. அதிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனி, ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
ஒரு நட்சத்திர வீரர் இப்படி ஒரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ரசிகர்களை விரக்தியடைய செய்தது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவரும் ஒரு கிரிக்கெட் வீரர். சினிமா நடிகர்கள் பங்கேற்றும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் விஷ்ணு விஷால் சிறப்பாக விளையாடக் கூடியவர். ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து சிஎஸ்கே அணி மோசமாக விளையாடி 5 போட்டிகளில் தோல்வியடைந்தது குறித்து அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் விஷ்ணு விஷால் கூறியிருப்பதாவது, நானே கிரிக்கெட்டர் என்பதால் இதைப் பற்றி பேச வேண்டாம், பேச வேண்டாம். சீக்கிரம் ஒரு முடிவுக்கு வர வேண்டாம் என இருந்தேன். ஆனால் இது மிகவும் மோசமாக இருக்கிறது. ஏன் இவ்வளவு டவுன் அண்ட் ஆர்டர் வரவேண்டும். வெற்றி பெறவே கூடாது என எந்த விளையாட்டையாவது விளையாடுவார்களா? சர்க்கஸூக்கு செல்வது போல் தான் இருக்கிறது. விளையாட்டை விட ஒரு தனி நபர் பெரியது இல்லை என்று நடிகர் விஷ்ணு விஷால் தோனி குறித்து விமர்சித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்

- Advertisement -

சற்று முன்