- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமீர்கான் நடிக்க விரும்பிய கேரக்டரில் நடிக்கும் தமிழ் நடிகர்… ஆர்யன் படம் குறித்து பேசிய நடிகர்...

அமீர்கான் நடிக்க விரும்பிய கேரக்டரில் நடிக்கும் தமிழ் நடிகர்… ஆர்யன் படம் குறித்து பேசிய நடிகர் விஷ்ணு விஷால் – பான் இந்தியா படங்கள் குறித்தும் விமர்சனம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷ்ணு விஷால். சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக விஷ்ணு விஷால் அறிமுகமானார். தொடர்ந்து முண்டாசுப்பட்டி நீர்பறவை குள்ளநரி கூட்டம் ராட்சசன் நேற்று இன்று நாளை கட்டாகுஸ்தி லால் சலாம் உள்ளிட்ட பல படங்களில் விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து கட்டாகுஸ்தி உள்ளிட்ட சில படங்களை சொந்தமாகவும் தயாரித்துள்ளார். இப்போது விஷ்ணு விஷால் நடிப்பில் ஆர்யன் என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரவீன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் வாணி போஜன் மற்றும் செல்வராகவன் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். வரும் 31ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது.

இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். விஷ்ணு விஷால் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்துள்ளது. ராட்சசன் வரிசையில் ஹாரர் திரில்லர் கதையம்சம் கொண்டு உருவாகி இருக்கும் ஆர்யன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கடைசியாக விஷ்ணு விஷால் நடித்த லால் சலாம் படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆர்யன் படம் குறித்து சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கூறியதாவது, கொரோனா காலகட்டத்தில் ஆர்யன் படத்தின் கதையை கேட்டேன். கதையை கேட்டதும் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ராட்சசன் படத்திற்கு பிறகு திரில்லர் படத்தில் நடிக்க வேண்டும். ஆனால் படம் மிகவும் வித்யாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு ஏற்றது போல ஆர்யன் படம் அமைந்தது,

கட்டாகுஸ்தி படம் தொடங்குவதற்கு முன்பே ஆர்யன் படத்திற்காக 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டோம். எனினும் பல காரணங்களால் ஆர்யன் படப்பிடிப்பு தாமதமானது. ஆர்யன் படத்தின் கதையைக் கேட்டு இந்தி நடிகர் அமீர்கான் இந்தப் படத்தின் இந்தி பதிப்பில் அவரே வில்லனாக நடிப்பதாக கூறினார். எனினும் இந்த படத்தின் இந்தி பதிப்பு தற்போது உருவாகும் சூழல் ஏற்படாமல் போய்விட்டது.

அமீர்கான் இந்தியில் நடிக்க விரும்பிய அந்த கதாபாத்திரத்தில் தான் இப்போது செல்வராகவன் நடித்திருக்கிறார். எனக்கு பான் இந்தியா கான்செப்டில் நம்பிக்கை இல்லை. தற்போது கடவுள் சார்ந்ததாகவும் அதீத கமர்ஷியலாகவும் இருக்கின்றன. ஆர்யன் படம் முற்றிலும் அதற்கு வேறானது. இந்த படம் அதிக மொழிகளில் வெளியாகி சில மொழிகளில் மட்டும் நல்ல பெயர் எடுத்தால் போதும் என்று நான் நினைக்கவில்லை. குறைந்த அளவு 2 மொழிகளில் வெளியானால் கூட எனக்கு அதன் வரவேற்பு மகிழ்ச்சியை கொடுத்தால் போதும் என்று நடிகர் விஷ்ணு விஷால் கூறியிருக்கிறார்.

சற்று முன்