- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதை சொல்லி சொல்லியே என்னை அவமானப்படுத்தினாங்க - வருத்தப்பட்டு பேசிய நடிகர் யோகிபாபு!

அதை சொல்லி சொல்லியே என்னை அவமானப்படுத்தினாங்க – வருத்தப்பட்டு பேசிய நடிகர் யோகிபாபு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு இருக்கிற அங்கீகாரம் மரியாதை அதே படத்தில் காமெடி நடிகருக்கும் இருக்கும் என்பதுதான் உண்மை. எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் நாகேஷ் சந்திரபாபு சோ ராமசாமி தேங்காய் சீனிவாசன் கேஏ தங்கவேலு என பலரும் அப்படிதான் சினிமாவில் பிரபலமாக இருந்தார்கள்.

அதன்பிறகு சுருளிராஜன் வெண்ணிற ஆடை மூர்த்தி எஸ்எஸ் சந்திரன் கவுண்டமணி செந்தில் வடிவேலு விவேக் சூரி சந்தானம் சதீஷ் என காமெடி நடிகர்கள் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர்களாக தான் வரவேற்பை பெற்றார். ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு எல்லோருமே ஹீரோவாக மாறி விடுகிறார்கள்.

- Advertisement -

அந்த வகையில் இப்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிஸியாக இருந்த பலரும் இப்போது ஹீரோவாக மாறிவிட்டதால் காமெடி நடிகர்களுக்கு தமிழ் படங்களில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் இப்போதைக்கு காமெடி காட்சிகளில் நடிக்க ஒரே சாய்ஸ் ஆக நடிகர் யோகி பாபு மட்டுமே இருக்கிறார்.

அவரை வைத்துதான் காமெடி காட்சிகள் பெரும்பாலான படங்களில் உருவாகி வருகின்றன. அந்த வகையில் நடிகர் யோகி பாபுவுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு குவிகின்றன. அதனால் அவர் பிஸியாக பல படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது கால்ஷீட் கிடைப்பதே பெரும்பாடு என்கிற அளவுக்கு ஒரே நாளில் 3 படங்களில் கூட அவர் மாறி மாறி நடிப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் யோகி பாபு ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது தனது கடந்த கால சம்பவங்களை பற்றி வருத்தத்தை வெளிப்படுத்தினார். அப்போது நடிகர் யோகிபாபு கூறியதாவது, ஆரம்பத்தில் சினிமாவில் நான் நடிக்க வந்த போது எல்லோரும் என்னுடைய முடியை வைத்து கிண்டல் செய்தார்கள். செல்லும் இடத்தில் எல்லாம் அதை சொல்லி சொல்லியே என்னை அவமானப்படுத்தினார்கள்.

அப்போதெல்லாம் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கும். ஆனால் காலப்போக்கில் அந்த முடிதான் என் அடையாளமாக மாறியது. பல படங்களில் நடிக்க அந்த முடிதான் அடையாளமாக எனக்கு வாய்ப்புகளை எனக்கு வாங்கி கொடுத்தது என்று நடிகர் யோகி பாபு வெளிப்படையாக கூறியிருக்கிறார். யோகிபாபு அவ்வப்போது சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்