- Advertisement -
Homeபொழுதுபோக்குஇரண்டு பாகங்களாக உருவாகும் முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு... சி.எம்.ரோலில் விஜய் சேதுபதி... அட இது நம்ம...

இரண்டு பாகங்களாக உருவாகும் முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு… சி.எம்.ரோலில் விஜய் சேதுபதி… அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…

- Advertisement -

தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் திரைத்துறையில் படிப்படியாக உயரம் தொட்டவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் புதுப்பேட்டை, நான் மகான் அல்ல சுந்தரபாண்டியன் ஆகிய திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், சீனு ராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் திரைப்படம் வசூலை பொறுத்தமட்டில் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக பரவலாக பேசப்பட்டது.

இதையடுத்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் என அடுத்தடுத்த வெற்றி படங்களில் விஜய் சேதுபதி நடிக்க, அவரது கிராஃப் டாப் கியருக்கு சென்றது. தொடர் வெற்றியை கொடுத்தது மட்டுமல்லாமல், நடிப்பிலும் விஜய் சேதுபதி பலரையும் கவனிக்க வைத்தார். எந்த ஒரு கதையாக இருந்தாலும், அதனை அப்படியே உள்வாங்கி ரசிகர்களுக்கு எளிதாக கடத்தச் செய்யும் திறமை விஜய் சேதுபதியிடம் இருப்பதை பல இயக்குனர்கள் உணர்ந்தனர்.

- Advertisement -

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பொறம்போக்கு என்கிற பொதுவுடமை, ஆரஞ்சு மிட்டாய் படங்களில் நடித்த விஜய் சேதுபதிக்கு அடுத்த திருப்பு முனையை கொடுத்த திரைப்படம் நானும் ரவுடிதான். விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடிக்க முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவான இந்தத் திரைப்படம், விஜய் சேதுபதிக்கு சூப்பர் ஹீரோ அந்தஸ்தை கொடுத்தது.

அதுமட்டுமில்லாமல் அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தையும் நானும் ரவுடிதான் சேர்த்தது. இதைத்தொடர்ந்து, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, செக்கச்சிவந்த வானம், சூப்பர் டீலக்ஸ் படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை அவர் வெளிப்படுத்தினார். பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும், மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாகவும் நடித்ததன் மூலமாகவும் பரபரப்பாக பேசப்பட்டார்.

- Advertisement -

96, விக்ரம் வேதா என பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த அவர், தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். தனது ஐம்பதாவது படமான மகாராஜாவிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி பல படங்களில் பிஸியாக நடித்து வரும் அவர், தற்போது கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டு பாகங்களாக இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாகவும், முதல் பாகத்தில் சித்தராமையாவின் இளம் பருவம் மற்றும் வழக்கறிஞராக அவர் எதிர்கொண்ட சவால்கள் குறித்து இருக்கும் என்றும், இரண்டாம் பாகத்தில் அவரது அரசியல் வாழ்க்கை குறித்து படம் எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. தற்போது சித்த ராமையாவின் இளமைப் பருவத்திற்கான கதாபாத்திரத்திற்கான நபரை படக்குழு தேர்ந்தெடுத்து வருகிறது. லீடர் ராமையா என தலைப்பிடப்பட்டிருக்கும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்