தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அம்பிகா. ரஜினி கமல் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் மோகன் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். புதிய தீர்ப்பு தழுவாத கைகள் தண்டனை மரியாதை உள்ளிட்ட படங்களில் விஜயகாந்துக்கு ஜோடியாக அம்பிகா நடித்திருக்கிறார்.
அதே போல் அம்பிகாவை போலவே அவரது தங்கை நடிகை ராதாவும் அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகையாக பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். எம்ஜிஆர் முதல்வராக இருந்த அந்த காலகட்டத்தில் ஏஆர்எஸ் ( அம்பிகா ராதா சரசம்மா) என்ற பெயரில் 40 ஏக்கர் பரப்பளவில் அவர்கள் சொத்து வாங்கினர். அதை எம்ஜிஆரே திறந்து வைத்தார்.
இப்போது அதில் சொத்து பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதாவது நடிகை ராதா, ஏஆர்எஸ் ஸ்டுடியோ பகுதியை ஆர்ஆர் கார்டன் என்று தனது பெயர் ராதா, அவரது கணவர் பெயர் ராஜசேகர் என்று மாற்றியதாகவும், 97 கோடி ரூபாய் வரை தனக்கு தராமல் ஏமாற்றி விட்டதாகவும் தன்னுடைய நகைகள் அனைத்தையும் ராதா அபகரித்து கொண்டதாகவும் நான் புகார் தந்தால் ராதா தான் ஜெயிலுக்கு போக வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் அக்கா அம்பிகா, ரூ. 46 கோடி செக் மோசடி செய்ய முயன்றதாக ராதா போலீசில் புகார் அளித்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை அம்பிகா, தனது தங்கை நடிகை ராதா தன் மீது கொடுத்த புகார் குறித்து விளக்கம் அளித்து பல்வேறு தகவல்களை கூறினார். அப்போது அம்பிகா கூறியதாவது, இந்த டைம்ல எல்லாம் நான் விஜயகாந்தை ரொம்பவும் மிஸ் பண்றேன். அவர் இருந்திருக்கலாம்.
இந்த சண்டை எல்லாம் அவருக்கு தெரியாது. ஆனால் அவர் எனக்கு அப்பவே சொல்லியிருக்கிறார். உனக்கு ஏஆர்எஸ்ன்னால பிரச்னை வரப்போகுது. கவலைப்படாதே. இந்த இன்டஸ்ட்ரிக்கு யாராலே ஏஆர்எஸ் வந்ததுன்னு தெரியும். நான் இருக்கேன் என்றார். ஏன்னா அவர் எல்லோருக்குமே நான் இருக்கேன் நான் இருக்கேன் என்று சொல்வார்.
அதனால் விஜயகாந்தை நான் ரொம்பவும் மிஸ் பண்றேன். அவர் இருந்திருந்தால் இந்த பிரச்னை இருந்திருக்காது. அவரே பேசி முடிச்சிருப்பார் என்று நடிகை அம்பிகா அந்த நேர்காணலில் செய்தியாளர்களிடம் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





