- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரண்மனை பட நடிகை தனது கணவரை பிரிந்து விட்டாரா? - இணையத்தில் தீயாக பரவும் தகவல்...

அரண்மனை பட நடிகை தனது கணவரை பிரிந்து விட்டாரா? – இணையத்தில் தீயாக பரவும் தகவல் உண்மைதானா? புலம்பும் ரசிகர்கள்!

- Advertisement -

சினிமாவில் நடித்து புகழ் பெறும் நடிகைகள் ஒரு கட்டத்தில் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கின்றனர். இதில் ஒரு சிலர் மட்டுமே கணவருடன் சேர்ந்து வாழ்கின்றனர். ஆனால் பெரும்பாலான நடிகைகள் திருமணமான சில மாதங்களில் சில ஆண்டுகளில் ஏன் பல ஆண்டுகள் கழித்தும் கூட தங்களது கணவரை பிரிந்து விவாகரத்து பெற்று விலகி விடுகின்றனர்.

இதில் பெரும்பாலான நடிகைகள் முதல் திருமணம் தோல்வியில் முடிந்தாலும் அடுத்த திருமணம் செய்துக்கொள்கின்றனர். ஒரு சிலர் இனி திருமண வாழ்க்கை வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து வாய்ப்பிருந்தால் சினிமாவில் அல்லது டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். சிலருக்கு வெப் சீரிஸ்களில் நடிக்கும் வாய்ப்பும் அமைகிறது.

- Advertisement -

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. பார்ப்பதற்கு சின்னதம்பி குஷ்பு போல இவர் காணப்பட்டதால் சின்ன குஷ்பு என்றும் ரசிகர்கள் மத்தியில் இவர் அழைக்கப்பட்டார். விஜய் ரவி மோகன் விஷால் சூர்யா தனுஷ் உதயநிதி என முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக ஒரு கல் ஒரு கண்ணாடி வேலாயுதம் அரண்மனை மாப்பிள்ளை போகன் மனிதன் ரோமியோ ஜூலியட் ஆம்பள சிங்கம் 2 பிரியாணி மான் கராத்தே புலி குலேபகாவலி என பல வெற்றிப் படங்களில் ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறார். சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா மோத்வானி திடீரென திருமணம் செய்துக்கொண்டார். இது ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியது.

- Advertisement -

கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம், தனது நீண்ட நாள் நண்பர் மற்றும் காதலர் சோஹேல் கதூரியா என்பவரை நடிகை ஹன்சிகா மோத்வானி காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரண்மனையில் மிகவும் விமரிசையாக நடந்தது. அப்போது தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஹன்சிகா இணையத்தில் வெளியிட அது வைரலானது.

இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது காதல் கணவர் சோஹேல் கதூரியாவை பிரிந்து விட்டதாகவும், கடந்த சில மாதங்களாகவே அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் ஹன்சிகா தனது வலைதள பக்கங்களில் வெளியிட்ட புகைப்படங்களில் அவர் மட்டுமே தனியாக போஸ் தருவதாகவும் அவரது கணவர் அந்த புகைப்படங்களில் இல்லை என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஹன்சிகாவும், அவரது கணவர் சோஹேல் கதூரியாவும் தங்களது பிரிவை முறையாக அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்