- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் எப்படி இருந்தால் என்ன…? சினிமாவில் நடிக்கணும் அதுதான் முக்கியம் - திடீரென ஷகிலா ரேஞ்சுக்கு...

நான் எப்படி இருந்தால் என்ன…? சினிமாவில் நடிக்கணும் அதுதான் முக்கியம் – திடீரென ஷகிலா ரேஞ்சுக்கு மாறிய நடிகை இனியா பேசிய தத்துவம்!

- Advertisement -

மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்தவர் நடிகை இனியா. சற்குணம் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்த வாகை சூடவா படத்தில் கிராமத்துக்கு சமையல்கார பெண்ணாக நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர். அடுத்து நான் சிவப்பு மனிதன் டிஎன்ஏ மௌன குரு மாசாணி உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடிகை இனியா நடித்திருந்தார்.

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் இனியா முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ஸ்வீட்டி நாட்டி கிரேஸி என்ற படத்தில் அவர் மிகவும் செக்ஸியான ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் சுந்தரா டிராவல்ஸ் நாயகி ராதாவும் மாமியார் கேரக்டரில் கவர்ச்சியாக நடித்துள்ளார்.

- Advertisement -

பொதுவாகவே நடிகைகளுக்கு இமேஜ் இணைந்து மார்க்கெட் சரிவடையும் போது கடைசியாக அவர்கள் கையில் எடுப்பது கவர்ச்சி என்கிற ஆயுதம்தான். ஏனெனில் கவர்ச்சியான கேரக்டரில் நடித்தால் ரசிகர்களின் கவனம் தங்கள் மீது அதிகரிக்கும். படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும் என்ற நோக்கம்தான். அந்த வரிசையில் இனியாவும் இப்போது கவர்ச்சிக்கு மாறிவிட்டார். ஷகிலா போல் அவர் ஸ்வீட்டி நாட்டி கிரேஸி படத்தில் நடித்திருப்பதாக ரசிகர்கள் விமர்சனம் செய்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை இனியா கூறியதாவது, நான் தொடர்ந்து ஹீரோயினாக படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. சரியாக உடற்பயிற்சி செய்ய முடியாமல் போனதால் எனக்கு உடல் எடை அதிகரித்து விட்டது.

- Advertisement -

ஒரு நடிகை எடை கூடி விட்டார் என்பதற்காக அவர் அக்கா அத்தை போன்ற கதாபாத்திரத்தில் தான் நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. குண்டாக இருப்பது என்பது ஒன்றும் பெரிய தவறு இல்லை. ஒல்லியாக இருந்த பல நடிகைகள் இப்போது இருந்த இடம் தெரியாமல் போய் விட்டார்கள்.

ஆனால் நான் இப்போதும் படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். குண்டாக இருக்கிறேனா ஒல்லியாக இருக்கிறேனா என்பது முக்கியமல்ல. சினிமாவில் எப்போதும் நடித்துக்கொண்டு இருப்பதுதான் முக்கியம் என்று நடிகை இனியா அந்த நேர்காணலில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்