- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் ஸ்பாட்டில் யாருக்கும் தெரியாமல் மேஜைக்கு அடியில் ஒளிந்து கொண்டு அழுத டைரக்டர் - பாலிவுட்...

ஷூட்டிங் ஸ்பாட்டில் யாருக்கும் தெரியாமல் மேஜைக்கு அடியில் ஒளிந்து கொண்டு அழுத டைரக்டர் – பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் போட்டுடைத்த சீக்ரெட்!

- Advertisement -

பாலிவுட் சினிமாவில் நட்சத்திர நாயகியாக வலம் வந்தவர் நடிகை மாதுரி தீட்சித். குறிப்பாக கடந்த 1980 மற்றும் 90களில் இந்தி சினிமாவில் மாதுரி தீட்சித் நம்பர் ஒன் நட்சத்திர நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். சல்மான்கான் ஷாருக்கான் அமீர்கான் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர்.

குறிப்பாக நடிகர் சல்மான்கான் நடித்த ஹம் ஆஃப் கே ஹை கோன் படத்தில் கதாநாயகியாக மாதுரி தீட்சித் நடித்திருப்பார். இந்த படமும் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படம் இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமின்றி தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதும் கணவர் பிள்ளைகளுடன் ஃபேமிலியில் செட்டில் ஆகிவிட்ட நடிகை மாதுரி தீட்சித் மீண்டும் பாலிவுட் ரீ என்ட்ரி கொடுத்து சில படங்களின் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கியுள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடிகை மாதுரி தீட்சித், பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் பணியாற்றிய படத்தின் இயக்குனர் ஒருவர் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அந்த இயக்குனர் ஒரு வித்யாசமான மனிதர். ஷூட்டிங் ஸ்பாட்டில் எந்த ஒரு காட்சியை விவரிப்பதாக இருந்தாலும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விடுவார். அவரை பற்றி பேசினாலே எனக்கு சிரிப்பை அடக்க முடியாது என்று நடிகை மாதுரி தீட்சித் சிரித்துக்கொண்டே பேசியிருக்கிறார். அப்போது நடிகை மாதுரி தீட்சித் கூறியதாவது, அந்த இயக்குனர் எதற்கெடுத்தாலும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விடுவார்.

எந்த அளவுக்கு என்றால் சில நேரங்களில் நடிகர்களுக்கு காட்சிகளை விளக்கும் போதே அந்த இயக்குனர் திடீரென காணாமல் போய்விடுவார். தேடிப் பார்த்தால் அவர் மேஜையின் அடியில் ஒளிந்து உட்கார்ந்துக்கொண்டு தேம்பி தேம்பி அழுது கொண்டிருப்பார். இன்னொரு முறை கேமரா டிராலி ஷாட் சென்ற போது நான் என்னுடைய வசனத்தை பேசி ரிகர்சல் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

அப்போது எங்கிருந்தோ விசும்பல் சத்தம் கேட்டது. சுற்றும் மற்றும் பார்த்தால் அந்த ட்ராலியில் மீது அமர்ந்துக்கொண்டு அந்த இயக்குனர் அழுது கொண்டிருந்தார். இதை பார்த்து நான் அதிர்ந்து போய் விட்டேன். இப்படியும் சில உணர்ச்சிவசப்பட்ட இயக்குனர்கள் அப்போது இருந்தார்கள் என்று மாதுரி தீட்சித் இந்த சுவாரசியமான தகவலை அந்த நேர்காணலின் போது ரசிகர்களுடன் பகிர்ந்து இருக்கிறார்.

சற்று முன்