நடிகர் ரஜினிகாந்த் பல சூப்பர் ஹிட் படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்திருக்கிறார். ஆனால் அவர் நடித்த படங்களில் மிக மோசமான தோல்வியை சந்தித்த படம் பாபா. கடந்த 2022ம் ஆண்டில் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த படம் வெளியானது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார்.
ஆன்மிக கதைக்களத்தில் உருவான இந்த படத்தில் ரஜினிகாந்த் பேட்டை ரவுடியாக இருப்பார். எங்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக் கேட்கும் ஒருவராக நடித்திருந்தார். நம்பியார் சுஜாதா ஆசிஷ் வித்யார்த்தி மனிஷா கொய்ராலா கவுண்டமணி கருணாஸ் டெல்லி கணேஷ் விஜயகுமார் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
மகா அவதார் பாபாஜியை ஒருமுறை சந்திக்கும் ரஜினிக்கு அவர் 7 மந்திரங்களை தருகிறார். அந்த மந்திரங்களை ரஜினிகாந்த் சரியாக பயன்படுத்தினாரா, அந்த மந்திர சக்தியை பயன்படுத்தி மக்களின் பிரச்னைகளை சரிசெய்தாரா, கடைசியில் அவர் அரசியல் ஆன்மிகம் எதை தேர்வு செய்தார் என்பதே பாபா படத்தின் கதை.
ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பாபா படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை ஆதரவை பெறவில்லை. இந்த படத்தில் கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். ரஜினி கூலி வேலை செய்பவர் என்ற காரணத்துக்காக ரஜினியை வேண்டாம் என மறுக்கும் கேரக்டரில் மனிஷா கொய்ராலா நடித்திருந்தது அவருக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
பம்பாய் உயிரே இந்தியன் ஆளவந்தான் முதல்வன் என தமிழில் சூப்பர் ஹிட் படங்களில் நடித்த மனிஷா கொய்ராலாவுக்கு பாபா படம் பெரிய தோல்வி படமாக அமைந்தது. தமிழில் அவர் நடித்த கடைசி படமும் இதுதான். அதன்பிறகு தனுஷ் ஹன்சிகா மோத்வானி நடித்த மாப்பிள்ளை படத்தில் மாமியார் கேரக்டரில்தான் மனிஷா நடித்திருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை மனிஷா கொய்ராலா கூறியதாவது, தமிழில் நான் கடைசியாக நடித்த பெரிய படம் பாபா. அந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் என் தென்னிந்திய திரை பயணம் முடிந்து விடும் என நினைத்தேன். அதேபோல் நடந்தது. பாபா திரைப்படம் அது எனக்கு தோல்வி மட்டுமல்ல, மிகப்பெரும் டிசாஸ்டராக அமைந்தது. அதன் பிறகு தென்னிந்திய பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது என்று மனிஷா கொய்ராலா கூறியிருக்கிறார்.





