தமிழ் சினிமாவில் இப்போதும் உச்ச நட்சத்திர நடிகையாக இருப்பவர் நயன்தாரா தான். ஒரு படத்துக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குகிறார். திருமணத்துக்கு பிறகும் அவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்தாலும் பெரும்பாலான படங்கள் இன்னும் திரைக்கு வராமல் தாமதம் ஆகிறது. தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் அவர் நடித்த மன சங்கர வர பிரசாத் காரு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
ஆனால் தமிழில் நயன்தாரா நடித்த படம் எதுவும் சமீபத்தில் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. அதிலும் தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா நடித்த படம் வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்டது. தெலுங்கில் ஒரு படம் ஹிட் கொடுத்தாலும் திருமணத்துக்கு பிறகு தமிழில் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படம் கொடுக்க நயன்தாரா தொடர்ந்து போராடி வருகிறார்.
அவர் பெரிதும் நம்பியிருக்கும் படம் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் 2 படம்தான். ஆனால் அந்த படம் கிராபிக்ஸ் சிஜி ஒர்க் உள்ளிட்ட பல்வேறு பணிகளால் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்விட்டது. அந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பதே இன்னும் உறுதியாகவில்லை. அந்த படத்தை விட்டு விட்டு புருஷன் படப்பிடிப்பில் இயக்குனர் சுந்தர் சி பிஸியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் இயக்கி அவரே நடிக்கும் காஞ்சனா 4 என்ற படத்தில் நடிகை நயன்தாரா கௌரவ வேடத்தில் நடிக்கிறார். அதாவது கெஸ்ட் ரோலில் வருகிறார். முன்பு ராகவா லாரன்ஸ் இயக்கிய திரில்லர் படங்களில் நித்யா மேனன் ஒரு படத்தில் இப்படி நடித்திருந்தார். அதேபோல் நடிகர் சரத்குமார் திருநங்கை கேரக்டரில் நடித்திருந்தார். அந்த பாணியில் காஞ்சனா 4 படத்தில் நயன்தாரா ஒரு கெஸ்ட் ரோலில் வருகிறார்.
ஆனால் சில நிமிடங்களே திரையில் வந்தாலும் வெயிட்டான ரோல், வெயிட்டான சம்பளம் என்பதால் இந்த கேரக்டருக்கு நடிகை நயன்தாரா ஓகே சொல்லிவிட்டதாக தெரிய வருகிறது. நீண்ட நாட்களாக தன்னை மறந்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த கேரக்டர் பேசப்படும் வகையில் இருக்கும் என்று நயன்தாரா நம்புகிறார். அதேசமயம் தனது கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடிக்க அதிக ஆர்வம் காட்டவில்லை.
அதே போல் சமீப காலமாக புதிய படங்கள் தயாரிப்பது, படம் விநியோகம் செய்வதையும் நயன்தாரா குறைத்துக்கொண்டார். இதனால் அவருக்கு பல கோடி ரூபாய் இழப்பு என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. எப்படி இருந்தாலும் காஞ்சனா 4 படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் படம் முழுக்க வருவார் என்ற எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அவர் சில காட்சிகளே மட்டுமே வரும் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.





