- Advertisement -
கடந்த 2024ம் ஆண்டில் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான படம் கல்கி 2898 ஏடி. பிரபாஸ் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் அமிதாப் பச்சன் கமல்ஹாசன் தீபிகா படுகோனே திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. கல்கி 2ம் பாகம் விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தின் முதல் பாகத்தில் தீபிகா படுகோனே நடித்த கேரக்டரில் நடிகை சாய் பல்லவி நடிப்பதாக தகவல் வெளியானது. தற்போது வந்த லேட்டஸ்ட் அப்டேட் படி வரும் 17ம் தேதி அன்று நடக்கும் கல்கி 2 படப்பிடிப்பில் சாய் பல்லவி கலந்துக்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்த படத்திலிருந்து விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக நடிகை சாய் பல்லவி இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.





