- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை சமந்தாவுக்கு விரைவில் 2வது திருமணம் - மாப்பிள்ளை கூட கன்பார்ம் பண்ணியாச்சு - முரட்டு...

நடிகை சமந்தாவுக்கு விரைவில் 2வது திருமணம் – மாப்பிள்ளை கூட கன்பார்ம் பண்ணியாச்சு – முரட்டு சிங்கிள் முடிவை மாற்றிக்கொண்டாரா சமந்தா?

- Advertisement -

நடிகை சமந்தா, தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர். சமந்தா அழகும், வசீகரமான தோற்றமும், நடிப்பும் அவருக்கு ஏராளமான ரசிகர்களை கொடுத்திருக்கிறது. அதனால் சமந்தா நடித்த படங்களை பார்க்க நிறைய ரசிகர் கூட்டம் உள்ளது. தமிழ், தெலுங்கு படங்களில் சமந்தா அதிகமாக நடித்திருக்கிறார்.

சமந்தா தமிழில் நடித்த தெறி, மெர்சல், கத்தி, தங்கமகன், நான் ஈ, நீதானே என் பொன் வசந்தம், யசோதை, காத்துவாக்குல ரெண்டு காதல், சீமராஜா, சாகுந்தலம், குஷி, யு டர்ன், 24, அஞ்சான், 10 என்றத்துக்குள்ள, ஓ பேபி என பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தவர் சமந்தா.

தெலுங்கில் நடித்த போது, நாகார்ஜூனா – அமலா நட்சத்திர தம்பதியின் மகன் நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். கடந்த 2017ம் ஆண்டில், கோவாவில் அவர்களது திருமணம் நடந்தது. இதன்பிறகு நான்கே ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2021ம் ஆண்டில் இருவரும் பிரிந்து, விவாகரத்து பெற்று விட்டனர்.

தொடர்ந்து சினிமா பயணத்தில் அதிக கவனம் செலுத்திய சமந்தா பல படங்களில் நடித்த நிலையில், திடீரென மயோசிடிஸ் என்னும் தோல் அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டார். உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் சென்று சிகிச்சை பெற்றார். வீட்டிலும் தங்கி சிகிச்சை பெற்றார். இதனால் அவர் பல மாதங்கள் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள முடியாத சூழல் உருவானது.

எனினும் உடல் நல பாதிப்பை கருத்தில் கொள்ளாமல், தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்று சாகுந்தலம், குஷி போன்ற படங்களில் நடித்துக் கொடுத்தார். இப்போது சிட்டாடல் என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வரும் சமந்தா, சில தினங்களுக்கு முன் சண்டை காட்சி ஒன்றில் டூப் போடாமல் அவரே கஷ்டப்பட்டு நடித்து, மயங்கி விழுந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், திருமணமே இனி வேண்டாம் என்ற நிலையில் இருந்த சமந்தாவை, அவரது வீட்டில் 2வது திருமணம் செய்துகொள்ளுமாறு அழுத்தம் தருகின்றனர். தனிமையில் வாழ்க்கை நீண்ட நாள் சகிக்க முடியாது என்றும், அவர்களது குடும்பத்தில் உறவுக்காரர் பையன் ஒருவரையே திருமணம் செய்து வைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளனர். முரட்டு சிங்கிள் என்ற எண்ணத்தில் இருந்த சமந்தாவை அவர்கள் சம்மதிக்க வைத்துள்ள நிலையில், திருமண ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம்.

சற்று முன்