- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவில் சீனியர் ஜூனியர் என்பதெல்லாம் கிடையாது - திறமைதான் முக்கியம் - நடிகை சிம்ரன் கொடுத்த...

சினிமாவில் சீனியர் ஜூனியர் என்பதெல்லாம் கிடையாது – திறமைதான் முக்கியம் – நடிகை சிம்ரன் கொடுத்த ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். குறிப்பாக அவர் நடித்த நேருக்கு நேர் அவள் வருவாளா வாலி கண்ணெதிரே தோன்றினாள் விஐபி ஜோடி தமிழ் துள்ளாத மனமும் துள்ளும் பிரியமானவளே பஞ்ச தந்திரம் பம்மல் கே சம்பந்தம் அரசு என பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக இருந்தன.

குறிப்பாக பத்ரி படத்தில் ஆல்தோட்ட பூபதி நானடா பாடலுக்கு சிம்ரன் விஜய் டான்ஸ் பெரிய அளவில் ரசிகர்களிடம் வைரலானது. அதே போல் பிதாமகன் படத்தில் விக்ரம் சூர்யாவுடன் பொன் மகள் வந்தாள் பாடலுக்கு டான்ஸ் ஆடி பெரிய அளவில் ரசிகர்ளை உற்சாகப்படுத்தினார். நடனத்தில் சிம்ரன் எப்போதுமே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றவர்.

- Advertisement -

சமீபகாலமாக நடிகை சிம்ரன் வில்லி கேரக்டர்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்திலும் பிரசாந்த் நடித்த அந்தகன் படத்திலும் ஆண்ட்டி ரோலில் நடித்து சிம்ரன் ரசிகர்களை மிரட்டினார். மேலும் பேட்ட படத்தில் ரஜினிக்கும் சிம்ரன் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தில் நடிகை சிம்ரன், நடிகர் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் ஒரு குடும்பம் சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்திய ஒரு கதைக்களத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் சிம்ரனுக்கு ஜோடியாக நடித்தது குறித்து சமீபத்தில் பேசிய சசிக்குமார், நான் சிம்ரனுக்கு ஜோடியாக நடிக்க கூடாதா எனக்கு அந்த தகுதி இல்லையா என கேட்டிருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து நடிகை சிம்ரன் கூறியிருப்பதாவது, நல்ல குடும்ப கதையாக இருப்பதால் டூரிஸ்ட் பேமிலி படத்துக்கு உடனே ஓகே சொன்னேன். இன்னொரு காரணம் சசிகுமார். அவர் ஒரு மிகப்பெரிய டைரக்டர் மற்றும் நடிகர். அவருடன் நடிப்பது எனக்கு பெருமைதான். சினிமாவில் ஜூனியர் சீனியர் என்ற பேதம் கூடாது. திறமைக்குதான் முதலிடம்.

அந்த வகையில் சசிகுமார் உடன் இணைந்து நடிப்பதை எனது அதிர்ஷ்டம் என்று தான் சொல்லுவேன். இனி அடுத்தடுத்த குடும்ப சென்டிமெண்ட் கதைகளில் நடிக்க திட்டமிட்டுள்ளேன். அதேபோல் ஆக்சன் வேடங்களில் நடிக்கவும் விரும்புகிறேன். தற்போது லண்டனில் எனது மூத்த மகன் படிப்பு சம்பந்தமாக அவருக்கு உதவியாக இருக்கிறேன். விரைவில் இந்தியா திரும்புவேன். அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் கலந்து கொள்வேன் என்று நடிகை சிம்ரன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்