தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவரும் நயன்தாராவும் தான் 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் தமிழ் சினிமாவில் ஹீரோயின்களாக தாக்குப் பிடித்துக் கொண்டு இருப்பவர்கள். இவர்களுடன் நடிக்க வந்த பல நடிகைகள் அக்கா அண்ணி அத்தை சித்தி கேரக்டர்களில் இப்போது டிவி சீரியல்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றனர்.
ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் சூர்யா விக்ரம் என முன்னணி நட்சத்திர ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த நடிகை திரிஷாவுக்கு இடையில் சிறிது மார்க்கெட் சரிவு ஏற்பட்டு இமேஜ் சரிந்தது. ஆனால் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிறகு மீண்டும் மார்க்கெட் சூடு பிடித்தது. குந்தவையாக மீண்டும் வீறுகொண்டு எழுந்த திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் அதிகரித்தன.
தமிழில் லியோ விடாமுயற்சி குட்பேட் தக்லைஃப் அக்லி மற்றும் கருப்பு ஆகிய படங்களிலும் மலையாளத்தில் ஐடென்டி தெலுங்கில் விஸ்வம்பரம் என அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்தார். இதற்கிடையே தி கோட் படத்தில் நடிகர் விஜயுடன் மட்ட பாடலுக்கும் ஒரு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை அசத்தினார்.
ஆனால் இதில் அஜீத்குமாருடன் நடித்த விடாமுயற்சி மற்றும் கமல் சிம்புவுடன் நடித்த தக்லைஃப் ஆகிய படங்கள் மிகப்பெரிய தோல்வி படங்களாக திரிஷாவுக்கு அமைந்துவிட்டது. அதிலும் தக்லைஃப் படத்தில் திரிஷாவின் இந்திராணி கேரக்டர் மிகவும் விமர்சனத்தில் சிக்கியது. ரசிகர்கள் மத்தியில் இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதனால் சமீபகாலமாக எந்த படத்திலும் நடிக்க நடிகை திரிஷா கமிட் ஆகாமல் தவிர்த்து வருகிறார். முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்கள், கதாநாயகியை மையப்படுத்திய கதைகள் என எந்த கதையை சொன்னாலும், இப்போது நான் நடிக்க கமிட் ஆக முடியாது. இன்னும் சில மாதங்கள் போகட்டும் என தட்டிக் கழிக்கிறார். ஏனெனில் தொடர் தோல்வி படங்கள் அவரை அச்சப்படுத்தி உள்ளன.
அதே நேரத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு படம் வெளியான பிறகு, அந்த படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து அடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகவும் திரிஷா முடிவு செய்திருக்கிறார். ஆனால் அந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்று சொல்லப்பட்ட நிலையில், இப்போது பொங்கலுக்குதான் ரிலீஸ் என்றும் கூறப்படுகிறது. இதனால் படங்களில் உடனே கமிட் ஆக முடியாமல் கடும் குழப்பத்தில் நடிகை திரிஷா அப்செட்டில் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.





