- Advertisement -
Homeபொழுதுபோக்குபுஷ்பா 2 படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாவதில் திடீர் சிக்கல், களத்தில் குதிக்க தயாரான...

புஷ்பா 2 படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாவதில் திடீர் சிக்கல், களத்தில் குதிக்க தயாரான விக்ரம், அருண்விஜய் – தரமான விருந்துதான்… கொண்டாடுங்கடே!

- Advertisement -

கடந்த 2021ம் ஆண்டில் வெளியாகி சக்கைப்போடு போட்ட படம் புஷ்பா. சுகுமாரன் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, சுனில், ஜெகதீஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய அளவில் பான் இந்தியா மூவியாக, பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இதில் புஷ்பராஜ் கேரக்டரில் நடித்த படத்தின் ஹீரோ அல்லு அர்ஜூன் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.

இந்த படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா என்ற பாடலை, நடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியா உசுப்பேற்றும் குரலில் பாடியிருந்தார். அந்த குத்தாட்ட பாடல் காட்சியில் தோன்றி நடித்த நடிகை சமந்தா கவர்ச்சியான ஆட்டத்தில் ரசிகர்களை இதயங்களை சிதறடித்தார். இந்த பாடல், ரசிகர்கள் மத்தியில் செம டிரண்டிங் ஆகி, பெரிய வரவேற்பை பெற்றது.

புஷ்பா முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில் 2ம் பாகம் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் சாட்டிலைட், டிஜிட்டல் உரிமங்கள் 200 கோடி, 150 கோடி ரூபாய் என அதிக விலைகளுக்கு போயுள்ளது. மேலும் தெலுங்கு பட வட்டாரத்தில் அல்லு அர்ஜூன் படத்துக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை தருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், புஷ்பா 2 வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனால் அந்த நாளில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த சில தமிழ் படங்கள் அதனால் நிறுத்தி வைக்கப்பட்டன. ஏனெனில் தமிழ்நாட்டு ரசிகர்கள் மத்தியிலேயே புஷ்பா 2 படம் குறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பும், ஆர்வமும் காணப்படுகிறது.

ஆனால் இப்போது புஷ்பா 2 படம் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது. ஏனெனில் இன்னும் 35 நாட்கள் படப்பிடிப்பு முடிக்க வேண்டியுள்ளதாக தெரிகிறது. படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு 20 நாட்கள், ஒரு பாடல் காட்சி 7 நாட்கள், இதர முக்கிய காட்சிகள் 8 நாட்கள் என 35 நாட்கள் படப்பிடிப்பை முடித்து, எடிட் செய்து, டப்பிங் பேசி படத்தை முடிக்க கால அவகாசம் அதிகமாக தேவைப்படுகிறது.

அதனால், புஷ்பா 2 குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என்பதால் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான், இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண்விஜய் வாய் பேசாத கேரக்டரில் நடித்துள்ள வணங்கான் ஆகிய 2 படங்களும் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் செய்யப்பட அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய இயக்குனர்களின் சிறந்த கதைக்கரு கொண்ட அம்சங்கள் நிறைந்த படங்களாக அவை இருக்கும் என்பதால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

சற்று முன்