தமிழ் சினிமாவில் இயக்குனராக நடிகராக வலம் வருபவர் செல்வராகவன். இப்போது 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்தை டைரக்ட் செய்து வருகிறார். தனக்கு தோன்றும் விஷயங்களை, நல்ல சிந்தனைகளை அவ்வப்போது தனது ரசிகர்களுக்காக வீடியோ வெளியிட்டு தனது கருத்துகளை சொல்வது செல்வராகவனின் வழக்கம்.
சமீபத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, நம் எல்லோருக்குள்ளும் ஒரு விரோதி இருப்பான். நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து ஆரம்பத்தில் இருந்து கூடவே கடைசி வரைக்கும் அவன் வருவான். எங்கே எங்கே என வெளியில் தேடாதீங்க. அவன் உங்களுக்கு உள்ளே இருக்கான்.
நீங்க என்ன செஞ்சாலும் ஒரு குரல் உள்ளே கேட்கும். நீங்க ஒரு வீடு கட்றீங்களா? இந்த வீடு விளங்காதுன்னு அந்த குரல் சொல்லும். கல்யாணம் பண்றீங்களா? இந்த கல்யாணம் விளங்காதுன்னு சொல்லும். குழந்தையை பார்த்தா இந்த குழந்தைக்கு ஏதாவது ஆயிடுமோ என்று கூடவே இருந்து கெட்டதை பேசிட்டே இருக்கும்.
இதை என்ன பண்றதுன்னு நமக்கே தெரியாது. ஏன்னா வெளியில் இருந்தா இதை கழுத்தை பிடிச்சு தூக்கலாம். சட்டைய பிடிச்சு தூக்கலாம். காலரை பிடிச்சு இழுக்கலாம். ஆனா உள்ளே இருந்து ஒரு வாய்ஸ், இது என்ன இது யாரு ஒரு டீடெய்லும் தெரியாத ஒரு விரோதியை வெச்சுக்கிட்டு நாம் வாழறோம்.
இதுக்கு என்ன பண்ணலாம் அப்படீன்னு யோசிச்சீங்கன்னா, இக்னோர் பண்ணுங்க அப்படீன்னு சொல்ல மாட்டேன். ஏன்னா அது என்ன பணணினாலும் கூட வரும். அந்த வாய்ஸ் கடவுளுக்கு என்று விட்ருங்க. அந்த வாய்ஸை கடவுள் பார்த்துக்குவார். எது நெகட்டிவ்வா வந்தாலும் கடவுளே நீ பார்த்துக்க. இப்படியே சொல்லி சொல்லி பழகுங்க.
இப்படியே கொஞ்சநாள் கொஞ்ச நாள் இப்படியே நெகட்டிவ்வா பேசிட்டே வரும். கடவுள் பார்த்துபாரப்பா கடவுள் பார்த்துப்பாரப்பா அப்படீன்னு சொல்லிட்டு உங்க வேலைய பாருங்க. கொஞ்ச நாளில் அதோட எபெக்ட் குறைஞ்சு குறைஞ்சு பண்ற காரியங்கள் நன்றாக வரும். அப்புறம் அது ஒரு பெரிய விஷயமா உங்களுக்கு தோணாது. ஒரு முழுமையான மன உறுதி எதிலும் வரும் என்று அந்த வீடியோவில் இயக்குனர் செல்வராகவன் கூறியிருக்கிறார்.





