- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்பா பேச்சை கேட்கவே மாட்டாங்களா? மீண்டும் களத்தில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - ஒருவேளை அதுதான்...

அப்பா பேச்சை கேட்கவே மாட்டாங்களா? மீண்டும் களத்தில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – ஒருவேளை அதுதான் காரணமா இருக்குமோ?

- Advertisement -

தமிழ் சினிமாவில் 74 வயதிலும் நாயகனாக நடித்துக்கொண்டு இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். வேட்டையன் படத்தை தொடர்ந்து இப்போது தனது 171வது படம் கூலி படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, மார்ச் மாதம் துவங்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த படத்தில் மோகன்லால் ஜாக்கி ஷெராப் சிவராஜ்குமாருக்கு பதிலாக தெலுங்கு நடிகர் பாலய்யா நடிக்க வாய்ப்புள்ளது. 13 மாதங்கள் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த நெல்சன் திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா சௌந்தர்யா என 2 மகள்கள் உள்ளனர். இதில் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து 2004ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டார். கடந்த 2022ம் ஆண்டில் அவர்கள் தங்களது பிரிவை அறிவித்தனர். கடந்தாண்டில் இருவரும் முறைப்படி கோர்ட்டில் விவாகரத்து பெற்றுவிட்டனர்.

தனுஷின் அண்ணன் இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் ஐஸ்வர்யா. பிறகு அவரே தனுஷ் ஸ்ருதிஹாசன் நடித்த 3 என்ற படத்தை இயக்கினார். அந்த படம் பிளாப் ஆனது. பிறகு கௌதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை என்ற படத்தை டைரக்ட் செய்தார். அந்த படமும் பலத்த தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

மீண்டும் லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். அந்த படமும் வெற்றி பெறவில்லை. இந்த படத்தில் கேமியோ ரோலிலும் ரஜினி நடித்திருந்தார். ஆனால் படம் பிளாப் ஆனது. அதே போல் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவும் குசேலன் என்ற படத்தை தயாரித்து ரஜினிக்கு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தினார்.

அதனால் தன் மகள்கள் இருவரையும் படம் தயாரிக்க வேண்டாம், டைரக்சன் வேண்டாம். குடும்ப வாழ்க்கையில் ஆர்வம் காட்டுங்கள் என ரஜினி பலமுறை சொல்லியும் அவர்கள் அதை கேட்பதாக இல்லை. இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த், குறைந்த பட்ஜெட்டில் ஒரு படத்தை அவரே தயாரித்து இயக்க உள்ளார். வரும் ஏப்ரல் 4ம் தேதி படப்பிடிப்பு துவங்க உள்ளது. தனது மாஜி கணவர் தனுஷ் டைரக்‌ஷனில் அசத்துவதால், அந்த போட்டிதான் இதற்கு காரணமாக என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்