- Advertisement -
Homeபொழுதுபோக்குகுட் பேட் அக்லியில் கேமியோ ரோலில் வருவது அந்த நடிகரா இல்லை இந்த நடிகரா... அவராக...

குட் பேட் அக்லியில் கேமியோ ரோலில் வருவது அந்த நடிகரா இல்லை இந்த நடிகரா… அவராக இருந்தாலும் இவராக இருந்தாலும் திரையரங்குகள் தெறிக்கப்போவது உறுதிதான்…

- Advertisement -

தமிழ் சினிமா தற்போது எதிர்பார்த்து இருக்கும் திரைப்படங்களின் மிக முக்கியமான ஒன்று குட் பேட் அக்லி. அஜித் குமார் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி நிறுவனமான மைத்திரி மூவிஸ் தயாரித்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

விடாமுயற்சி திரைப்படத்தை தொடர்ந்து இந்த திரைப்படத்திலும் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருக்கிறார் திரிஷா. அவருக்கு ரம்யா என்னும் கதாபாத்திரத்தை ஆதிக் ரவிச்சந்திரன் வழங்கி இருக்கிறார். இதுபோக யோகி பாபு, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதில் அர்ஜுன் தாஸ்க்கு வில்லன் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் அஜித்தின் கெட்டப்பே பலருக்கும் பிடிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. கலர் கலர் சட்டை, உடம்பெல்லாம் டாட்டூ என வேறொரு தளத்தில் அஜித் குமாரை காண முடிந்ததாக பலரும் கூறினர். அண்மையில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியானது.

அது மட்டுமல்லாமல் 24 மணி நேரத்தில் அது கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்று இதற்கு முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்தது. டீசரில் முழுக்க முழுக்க அஜித்தை மட்டுமே பிரதானப்படுத்தி இருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். வாலி தீனா வேதாளம் பில்லா உள்ளிட்ட திரைப்படங்களில் அஜித்தின் குறிப்பிடத்தக்க மேனரிசங்களை இந்த திரைப்படத்தில் அவர் காட்டி இருந்தார்.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் டீசரில் ஜிவி பிரகாஷின் பின்னணி இசையும் பலரது கவனத்தை ஈர்த்தது. அடுத்ததாக வரும் 18ஆம் தேதி, குட் பேட் அக்லி திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகிறது. இதற்கு ஓ ஜி சம்பவம் என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. படத்தில் நடிகை சிம்ரனும் கேமியோ ரோலில் வருவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

அதுபோக ஒரு முன்னணி நடிகரும் வருகிறாராம். பலரும் சிலம்பரசன் தான் படத்தில் வருகிறார் என்று கூறி வந்தார்கள். ஆனால் தற்போது அந்த பட்டியலில் இணைந்திருக்கிறார் எஸ் ஜே சூர்யா. ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரனின் முந்தைய திரைப்படமான, மார்க் ஆண்டனியில் எஸ் ஜே சூர்யா பட்டையை கிளப்பி இருந்தார். இந்த நிலையில் அவர்தான் குட் பேட் அக்லியில் வருவதாக பலரும் சொல்கிறார்கள். வரும் பத்தாம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் நிலையில் அதற்கான பணிகள் தீவிரம் எடுத்து உள்ளன.

- Advertisement -

சற்று முன்