- Advertisement -
Homeபொழுதுபோக்கு20 நிமிடங்களில் டியூன் போட்ட ரஜினி குஷ்பு பாடல், டைரக்டர் கே பாலசந்தர் போட்ட...

20 நிமிடங்களில் டியூன் போட்ட ரஜினி குஷ்பு பாடல், டைரக்டர் கே பாலசந்தர் போட்ட உத்தரவு – இசையமைப்பாளர் தேவா சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

ஒருமுறை நேர்காணலில் பேசிய இசையமைப்பாளர் தேவா கூறியதாவது, அண்ணாமலை படம் ஷூட்டிங் நடந்த போது ஒரு நாள் இரவு இயக்குனர் கே பாலசந்தர் என்னை அழைத்தார். அவர்தான் அந்த படத்தின் தயாரிப்பாளர். நாளை ரஜினி குஷ்பு கால்ஷீட் இருக்கிறது. ஒரு பாட்டு ரெடி பண்ணிட்டு காலையில் ரெக்கார்டிங் வந்துடுங்க என்றார். சார், அது எப்படி ஒரே ராத்திரியில் முடியும் என்றேன். உன்னால் முடியும்யா. எனக்கு நம்பிக்கை இருக்கு என்றார். அடுத்த நாள் ஸ்டுடியோவில் 20 நிமிடங்களில் டியூன் போட்டு உருவான பாடல்தான் ரெக்கை கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள் என்ற ஹிட் பாடல் என்று தேவா அதில் கூறியிருக்கிறார்.

சற்று முன்