- Advertisement -
Homeபொழுதுபோக்குரசிகர்கள் என்னை வெறுக்கின்றனர், அப்படி நான் நடித்தது ரொம்பவும் தப்பாகி விட்டது - மோசமான விமர்சனங்களை...

ரசிகர்கள் என்னை வெறுக்கின்றனர், அப்படி நான் நடித்தது ரொம்பவும் தப்பாகி விட்டது – மோசமான விமர்சனங்களை சந்தித்த தனுஷ் பட நடிகை ஆதங்கம்!

- Advertisement -

மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் அனுபமா பரமேஸ்வரன். மலையாளத்தில் நிவின் பாலி நாயகனாக நடித்த பிரேமம் படத்தில் 3 நாயகிகளில் ஒருவராக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். அந்த படத்தில் பிரபலமான அவர் இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிக படங்களில் நடித்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக தெலுங்கில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நிறைய படங்களில் நடிக்கிறார். தமிழில் அனுபமா பரமேஸ்வரன் கொடி என்ற படத்தில் நடிகர் தனுஷூக்கு ஜோடியாக முட்டை மாலதி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகை திரிஷா பிரதான கதாநாயகியாவும் 2வது கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரனும் நடித்திருந்தனர்.

- Advertisement -

கொடி படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். துரை செந்தில்குமார் இந்த படத்தை டைரக்ட் செய்கின்றார். இந்த படத்தை தொடர்ந்து சூரி நடித்த கருடன் படத்தை இயக்கிய இயக்குனர் துரை செந்தில்குமார், இப்போது சரவணன் ஸ்டோர்ஸ் லெஜண்ட் அண்ணாச்சி நடிக்கும் படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் தொடர்ந்து டிராகன் படத்திலும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். இந்த படமும் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் தற்போது அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள பர்தா என்ற படம் ரிலீஸூக்கு தயாராகியுள்ளது. இந்த படத்தின் பிரமோசன் தொடர்பாக ஒரு நேர்காணலில் அவர் பங்கேற்றார்.

- Advertisement -

அப்போது தில்லு ஸ்கொயர் படத்தில் அளவுக்கு மீறிய கவர்ச்சியாக நடித்தது குறித்து அனுபமா பரமேஸ்வரன் வேதனையாக பேசியிருக்கிறார். அதுபற்றி அனுபமா பரமேஸ்வரன் கூறியதாவது, தில்லு ஸ்கொயர் படத்தில் நடித்த போது எனக்கே சங்கடமாகத்தான் இருந்தது. அப்படியான வேடங்களை தவறு என சொல்லவில்லை. இருப்பினும் அந்த கதாபாத்திரம் என்னுடைய ரியல் கேரக்டருக்கு எதிரானது.

அதில் வசதி இல்லாத ஆடைகளை அணிந்தேன். அது எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் கதைக்கு தேவை என்பதால் அப்படி நடிக்க வேண்டியதாகி விட்டது. அந்த படம் முடியும் வரை ஒருவித பதற்றத்துடன் நடித்தேன். தில்லு ஸ்கொயர் படம் வெளியான பின் அதற்கான எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டேன். ரசிகர்கள் என்னை வெறுத்தனர். இனி அந்த மாதிரியான படங்களில் என்னை நடிக்கச் சொன்னால் நிச்சயமாக நடிக்க மாட்டேன் என்று அனுபவமா பரமேஸ்வரன் வேதனையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்