- Advertisement -
Homeபொழுதுபோக்குகாஞ்சனா 4 திரைப்படத்தில் பூஜா ஹெக்டேவுக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா... அடேங்கப்பா ராகவா லாரன்ஸ்...

காஞ்சனா 4 திரைப்படத்தில் பூஜா ஹெக்டேவுக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா… அடேங்கப்பா ராகவா லாரன்ஸ் பிளான் பயங்கரமா இருக்கும் போலயே…

- Advertisement -

நடனத்தை மட்டுமே நம்பி திரையுலகுக்கு வந்த ராகவா லாரன்ஸ், தற்போது நடிகர் இயக்குனர் என பன்முகத்தன்மை பெற்று பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். அதிலும் குறிப்பாக காஞ்சனா பட சீரிசை கொடுத்து புகழின் உச்சத்திற்கு சென்றார். இதில் முதல் இரண்டு பாகங்களும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

மூன்றாம் பாகம் அந்த அளவு வரவேற்பு பெறவில்லை. இது நடுவே அவர் நடித்த எந்த திரைப்படங்களும் வெற்றி பெறவில்லை. மொட்ட சிவா கெட்ட சிவா, சந்திரமுகி இரண்டாம் பாகம், ருத்ரன் என அவர் நடித்த அத்தனை திரைப்படங்களும் படு தோல்வியை சந்தித்தன. ஒரே மாதிரி கதையில் இந்த பிரச்சனை இருப்பதாக பலரும் கூறி வந்தனர்.

- Advertisement -

இப்படியான சூழலில் தான், ராகவா லாரன்ஸுக்கு பெயர் கொடுக்கும் திரைப்படமாக அமைந்தது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்த இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு பலரும் எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பை தான் எதிர்பார்த்து காத்து இருந்தார்கள். ஆனால் அவரை விட அதிக காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்த ராகவா லாரன்ஸின் கதாபாத்திரம் அருமையாக இருந்ததாக பலரும் கூறினார்கள்.

இதன் பிறகு லோகேஷ் கனகராஜின் கதை மற்றும் தயாரிப்பில் பென்ஸ் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பதாக இருந்தது. முதலில் இந்த திரைப்படத்தை, ரத்தினகுமார் இயக்குவதாக இருந்தார். ஆனால் அவர் கதையில் சில மாற்றங்களை செய்ய சொல்லி கூறி இருக்கிறார். அது நடைபெறாமல் போனதால் அவர் விலக, தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார்.

- Advertisement -

இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோவிலேயே, இது எல் சி யு வுக்குள் வருவதாக கூறியிருந்தார் லோகேஷ் கனகராஜ். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதன் பணிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, காஞ்சனா திரைப்படத்தில் நான்காம் பாகத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ராகவா லாரன்ஸ்.

இதில் பூஜா ஹெக்டே, நோரா பதேகி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முதல் கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடத்தப்பட்டது. இதில் பூஜா ஹெக்டேவுக்கு காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறாராம் ராகவா லாரன்ஸ். அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடத்தப்பட இருக்கிறதாம். ஹாரர் படமாக எடுக்கப்பட்டு வரும் இதனை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்