- Advertisement -
Homeபொழுதுபோக்குகஜினி 2 பாகத்தை இயக்க தயாரான இயக்குனர் ஏஆர் முருகதாஸ், ஆனா ஹீரோ நம்ம சூர்யா...

கஜினி 2 பாகத்தை இயக்க தயாரான இயக்குனர் ஏஆர் முருகதாஸ், ஆனா ஹீரோ நம்ம சூர்யா இல்லையாமே? – தமிழ் சினிமா ரசிகர்களை இப்படி ஏமாத்திட்டீங்களே ப்ரோ?

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க ஒரு முக்கிய இயக்குனராக இருப்பவர் ஏ ஆர் முருகதாஸ். சமூக விழிப்புணர்வுடன் நல்ல படங்களை தரும் முக்கிய படைப்பாளிகளில் தமிழ் சினிமாவில் ஏஆர் முருகதாஸ் ஒருவர். குறிப்பாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ரமணா படம் பெரிய அளவில் மக்களை கவர்ந்த ஒரு படமாக இருந்தது. கேப்டன் விஜயகாந்துக்கு இந்த படம் பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது.நடிகர் விஜய் நடித்த கத்தி, துப்பாக்கி, சர்கார் போன்ற படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

துவக்க காலத்தில் ஏ.ஆர். முருகதாஸுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக, வெற்றி படமாக அமைந்த படம் கஜினி. இந்த படத்தில் சூர்யா நாயகனாக, சஞ்சய் ராமசாமி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. 15 நிமிடங்களுக்கு ஒரு முறை நடந்ததை மறந்து விடும் அம்னீஷியா கேரக்டரில் நடிகர் சூர்யா வாழ்ந்திருந்தார். இந்த படத்தில் அசின் சூர்யாவுக்கு ஜோடியாகவும், நயன்தாரா 2வது நாயகியாகவும் நடித்திருந்தார்.

- Advertisement -

துவக்கத்தில் கஜினி படத்தில் நடிகர் அஜீத்குமார் ஹீரோவாக நடித்தார். சில வாரங்கள் அவர் கஜினி படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில், ஒரு கட்டத்தில் தலையில் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும், முகத்தில் கீறல்கள், வடுக்கள் போல் மேக்கப் செய்து கொள்ள வேண்டும் என்று டைரக்டர் கூறியதால், அப்படிப்பட்ட ஒரு கேரக்டரில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் அஜீத்குமார் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார்.

அதன் பிறகு சில முன்னணி நடிகர்களை ஏ.ஆர். முருகதாஸ் கேட்ட போது அவர்களும் கஜினி படத்தில் நடிக்க மறுத்துவிட்டனர். ஆனால் கஜினி படத்தில் சஞ்சய் ராமசாமி கேரக்டரில் நடிக்க தாமாக முன்வந்து அந்த படத்தில் நடித்து ஒரு பெரிய வெற்றியை தந்தவர் நடிகர் சூர்யா என்றால் மிகையல்ல. தற்போது ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே 23 படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்த படம் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது.

- Advertisement -

இதையடுத்து இந்தியில் சல்மான்கான் நடிக்கும் சிக்கந்தர் என்ற படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார். இதற்கு பின் விரைவில் கஜினி படத்தின் 2ம் பாகத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க உள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டில் வெளிவந்த சூர்யா நடித்த கஜினி படத்தை தொடர்ந்து, 2008ம் ஆண்டில், அதே படத்தை இந்தியில் அமீர்கானை வைத்து ரீமேக் செய்தார். அந்த படமும் பெரிய வெற்றியை பெற்றது.

ஆனால் தற்போது கஜினி படத்தின் 2ம் பாகத்தை அமீர்கானை வைத்து இந்தியில் ஏஆர் முருகதாஸ் இயக்க உள்ளார். சல்மான்கான் நடித்து வரும் சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், கஜினி 2 படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. ஆனால் கஜினி படத்தில் தமிழில் முதலில் நடித்தவர் சூர்யாதான். அவரது நடிப்பில் கஜினி 2ம் பாகத்தை இயக்காமல், இந்தியில் அமீர்கான் நடிப்பில் 2ம் பாகத்தை ஏஆர் முருகதாஸ் இயக்குவது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்