- Advertisement -
இயக்குனர் மனோஜ் குமார் இயக்கத்தில் ஸ்ரீராம் தாபஸ்வினி பூனாச்சா நடிப்பில் உருவாகியுள்ள கன்னட படம் பிரேமடா ஊராளி. இந்த படம் வெறும் 2.5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 19 நாட்களில் ரூ. 75 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் பங்கு மட்டும் சுமார் 32.74 கோடி ரூபாயை கடந்து லாபம் 1300 சதவீதம் தாண்டி மாஸ் காட்டி வருகிறது. கன்னடத்திலும் கதையம்சம் கொண்ட படங்களை ரசிகர்கள் கொண்டாடுவதையே இது பிரதிபலிக்கிறது. காந்தாரா படங்களின் நாயகன் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி பிரேமடா ஊராளி படக்குழுவினரை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.





