- Advertisement -
Homeபொழுதுபோக்குஇசைப்புயல் ஏஆர் ரகுமான் அந்த படத்தில் நடித்திருக்கிறாரா? நடிகர் பிரபுதேவா சொன்ன சீக்ரெட் -...

இசைப்புயல் ஏஆர் ரகுமான் அந்த படத்தில் நடித்திருக்கிறாரா? நடிகர் பிரபுதேவா சொன்ன சீக்ரெட் – வாவ் என ஆச்சரியப்பட்ட சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்த படம் மூன் வாக். இந்த படத்துக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பேசிய நடன இயக்குனர் மற்றும் நடிகர் பிரபுதேவா இந்த படத்தில் ஏஆர் ரகுமானும் நடித்திருக்கிறார் என்ற பெரிய சீக்ரெட்டை போட்டு உடைத்திருக்கிறார்.

மூன்வாக் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் பிரபுதேவா கூறியதாவது, நான் இந்த கதையை கேட்கவே இல்லை. உங்களையும் ரகுமான் சாரையும் வைத்து படம் பண்ண வேண்டும் என்று டைரக்டர் மனோஜ் சொன்னார். உடனே ஓகே சொல்லிவிட்டு அதற்கு பிறகு தான் கதையை கேட்டேன்.

- Advertisement -

மனோஜ் இயக்கிய முதல் படம் இது. ஆனால் அதை நம்பவே முடியவில்லை. நான் பணியாற்றியதில் சிறந்த இயக்குனர்களில் மனோஜ் ஒருவர். நானும் ஏஆர் ரகுமான் சாரும் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் படம் இது. அந்த படத்தின் மீது என்ன எதிர்பார்ப்பு உண்டாகும் என்பது எனக்கு தெரியும். எனக்கு என்ன வயசு ஆனாலும் உங்கள் எதிர்பார்ப்பு குறையப்போவதில்லை. ரகுமான் சாரும் மரண அடி அடித்திருக்கிறார்.

அவர் லெவலுக்கு நாமும் போக வேண்டும் என்றால் மிஸ்டர் ரோமியோ காதலன் சமயத்தில் இருந்த வேகத்தை நான் காட்ட வேண்டும். அந்த ஸ்வாக் ஸ்பீடு எல்லாவற்றையும் மசில் மெமரியில் இருந்து கொண்டு வர வேண்டும். எல்லோரும் பயங்கரமாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். உங்களுக்காக தான் நான் கடுமையாக உழைத்திருக்கிறேன்.என்னை அப்படி ஆட வைத்திருக்கிறார்கள். அதற்காக நிறைய உழைத்திருக்கிறேன்.

- Advertisement -

ஆடியன்ஸ் பார்க்கும்போது அந்த பழைய பிரபுதேவாவை பார்ப்பார்கள். இந்த படத்தில் மறக்க முடியாத தருணம் நான் ரகுமான் சாருடன் நடித்ததுதான். ரகுமான் சார் நடிக்கிறார் என்று சொன்னதும் நிஜமாக நடிக்கிறாரா என்று ஆச்சரியமாக கேட்டேன். இந்த படத்தில் எனக்கும் ரகுமான் சாருக்கும் சின்னதாக சண்டை போடும் காட்சி உள்ளது.

அதை அவர் மிக அழகாக செய்துவிட்டார். அவர் எது செய்தாலும் கியூட்டாக இருக்கிறது என்று பிரபுதேவா அப்போது கூறியிருக்கிறார். இதன் மூலம் மூன்வாக் படத்தில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் சில காட்சிகளில் நடித்திருப்பது சினிமா ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. பலரும் அவரது நடிப்பை திரையில் காண ஆர்வமாக இருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்