கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ஜென்ட் ஆகியோரது திருமணம் குறித்த தகவல்கள் தான் கடந்த சில நாட்களாகவே இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. அந்த வகையில் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட ஏ.ஆர் ரஹ்மான் செய்துள்ள ஒரு செயல் தற்போது அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளதோடு இணையத்திலும் வைரலாகி உள்ளது.
அந்த வகையில் உலகில் மிகப் பிரபலமான பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. அவரது இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்சென்ட் ஆகியோருக்கும் கடந்த ஆண்டு பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. அதனை தொடர்ந்து கடந்த ஆறு மாதங்களாகவே அவர்களது திருமண கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்தன.
இறுதியாக ஜூலை 12-ஆம் தேதி அவர்களுக்கு திருமணமும் நடைபெற்று முடிந்தது. இதுவரை இல்லாத அளவிற்கு பல வகையான உணவுகள், கலை நிகழ்ச்சி, நட்சத்திர கொண்டாட்டம் என கோளாளமாக இந்த திருமணம் நடைபெற்று முடிந்தது.
உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு தொழிலதிபர்கள், மிகப்பெரிய பணக்காரர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள், சர்வதேச பிரபலங்கள் என இந்த திருமணம் விழாவில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட 5000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த திருமணத்தில் தமிழக இசையமைப்பாளரான இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானும் கலந்து கொண்டார்.
மேலும் இந்த விழாவில் தனது குடும்பத்தோடு கலந்து கொண்ட அவர் இசை நிகழ்ச்சியும் நடத்தி இருந்தார். அந்த வகையில் இந்த இசை நிகழ்ச்சியின் போது பாடகி ஒருவர் ஹிந்தியில் பாடியிருந்த வேளையில் உடனே ஏ.ஆர் ரகுமான் அடுத்த வரியை தமிழில் பாடி இருந்தார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் “எப்போதும் தலைவன் மாஸ்” என்று தமிழில் பாடிய அவர் மீது ரசிகர்களும் வாழ்த்தை வருகின்றனர். 2 ஆஸ்கர் விருதுகளை வாங்கும் போது அந்த மேடையிலேயே தமிழில் பேசிய ஏ.ஆர் ரஹ்மான் இப்படி அம்பானி வீட்டு குடும்பத்தில் பல்வேறு பிரபலங்களுக்கு மத்தியிலும் தமிழில் பாடியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.





