தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர் ரகுமான் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் தனது இசையின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்துள்ளார். அவரது இசையமைப்பில் வெளியான பல்வேறு படங்கள் ஹிட் அடித்துள்ள வேளையில் இனி வெளியாக இருக்கும் பல படங்களுக்கும் அவர் இசையமைத்து வருகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி இசையமைப்பாளராக பயணித்து வரும் ஏ.ஆர் ரகுமான் அவ்வப்போது இசைக்கச்சேரி நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது இவ்வளவு பிசியான ஷெடியூலுக்கு மத்தியிலும் அவர் உலகெங்கிலும் இசைக்கச்சேரியை நடத்தி வருகிறார். அந்த வகையில் ஏ.ஆர் ரகுமான் பெரும்பாலும் வெளிநாடுகளில் தான் இசைக்கச்சேரி நடத்துவார் என்று பார்க்கப்பட்டு வரும் வேளையில் தற்போது தமிழ்நாட்டு ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டின் சில முக்கிய நகரங்களில் மறக்குமா நெஞ்சம் என்கிற இசைக் கச்சேரியை நடத்த உள்ளதாக அறிவித்திருந்தார்.
அதன்படி சென்னையில் கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி மறக்குமா நெஞ்சம் என்கிற இசை கச்சேரி நடக்கும் என்று கூறப்பட்டிருந்த வேளையில் கனமழை காரணமாக அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்களுக்கு செப்டம்பர் 10-ஆம் தேதி மீண்டும் சென்னையில் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரி நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.
Thalaivar fun😄 @arrahman #ARRahmanConcert #ARRahman #ARR pic.twitter.com/fMRKVr0XHw
— Drake (@bat231_) August 22, 2023
இந்நிலையில் இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி கோவையில் மறக்குமா நெஞ்சம் இசைக் கச்சேரியை ஏ.ஆர் ரகுமான் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். இதில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் கலந்து கொண்டு அவரது இசை நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். அந்த நிகழ்ச்சியின் போது ஏ ஆர் ரகுமானின் மகனும் அவருடன் வந்திருந்தார்.
மேடையில் அவரது மகன் நிற்கும்போது ஏ.ஆர் ரகுமான் அவரை கலாய்த்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் மேடையில் நின்று கொண்டிருந்த தன் மகனிடம் பயமா இருக்கா? இல்ல உற்சாகமா இருக்கா? பொண்ணுங்க எல்லாம் பார்த்துட்டு இருக்காங்க என்று சொன்னதும் அவரது மகன் ஆமின் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். அதையடுத்து தமிழில் பேசுப்பா என்று ஏ.ஆர் ரகுமான் சொன்னதும் அங்கிருந்த ரசிகர்கள் கத்தி ஆரவாரம் செய்துள்ளனர். இது குறித்த வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.





