- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் குத்துச்சண்டை களத்தில் இறங்க தயாரான இயக்குனர் பா ரஞ்சித், சார்பட்டா பரம்பரை 2 படம்...

மீண்டும் குத்துச்சண்டை களத்தில் இறங்க தயாரான இயக்குனர் பா ரஞ்சித், சார்பட்டா பரம்பரை 2 படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த நடிகர் ஆர்யா!

- Advertisement -

அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பா ரஞ்சித். காதல் காமெடி கலந்த முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக பா ரஞ்சித் கவர்ந்தார். இதில் தினேஷ் கலையரசன் நந்திதா ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் அறிமுகமாகினர். இப்போது அவர்கள் 4 பேருமே தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் கலைஞர்களாக இருக்கின்றனர்.

அட்டக்கத்தி படத்துக்கு பிறகு கார்த்தி நடித்த மெட்ராஸ் படம் பெரிய வெற்றிப் படமாக இருந்தது. சுவரில் வரையப்பட்ட ஒரு அரசியல்வாதியின் உருவப்படத்தை மையப்படுத்தி இன்றைய அரசியல் சூழலை சொன்ன பா ரஞ்சித்தின் கதை, திரைக்கதை இயக்கம் பெரிய அளவில் ரசிகர்களின் கவனம் பெற்றது.

தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த கபாலி காலா படங்களை பா ரஞ்சித் இயக்கினார். இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று பா ரஞ்சித்துக்கு அதிக வரவேற்பை பெற்றுத் தந்தன. கபாலி படம் அளவுக்கு காலா படம் ஓடவில்லை என்றாலும், அதிலும் ரசிக்கும்படியான திரைக்கதை, காட்சிகள் இருந்தன.

தொடர்ந்து பல படங்களை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா பசுபதி கலையரசன் துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் கொரோனா தொற்று காலகட்டமாக இருந்ததால், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படமாகும்.

இந்த படம் 2ம் பாகமாக வெளிவரும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சில ஆண்டுகளாக அதுபற்றிய வேறு தகவல்கள் எதுவும் இல்லை. இதற்கிடையே தங்கலான் படத்தை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித், அந்த படத்துக்கு பிறகு இப்போது வேட்டுவம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தினேஷ் நாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் ஆர்யா கூறுகையில், சார்பட்டா பரம்பரை 2ம் பாகமாக வர உள்ளது. அதற்கான ப்ரீ புரடக்சன்ஸ் பணிகள் விரைவில் துவங்க உள்ளது. வருகிற 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சார்பட்டா பரம்பரை 2ம் பாகம் படப்பிடிப்பு துவங்க உள்ளது என்று லேட்டஸ்ட் அப்டேட் தந்திருக்கிறார். இது தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சற்று முன்