- Advertisement -
தமிழ் திரைப்பட இசையமைப்பாளராக கானா பாடகராக ரசிகர்களின் மனங்களை வென்ற தேனிசை தென்றல் தேவா, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது சிறந்த இசையமைப்பாளர் விருது 1990ம் ஆண்டில் வைகாசி பொறந்தாச்சு படத்துக்காக பெற்றிருக்கிறார். மேலும் 1992ம் ஆண்டில் கலைமாமணி விருதும் 1995ம் ஆண்டில் தமிழ்நாடு மாநில திரைப்பட விருது ஆசை படத்துக்காகவும் பெற்றிருக்கிறார். மேலும் பாட்ஷா படத்திற்காக தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சார அகாடமி விருது, அமிர்தா வர்ஷினி கன்னட திரைப்படத்திற்காக பிலிம்பேர் சிறந்த இசையமைப்பாள விருது தேவா பெற்றிருக்கிறார். ஆனால் தேனிசை தென்றல் தேவா என்பதே ரசிகர்களிடம் நிலைத்துவிட்டது.





