ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “ஜெயிலர்” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 10 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தை நெல்சன் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலாக வெளிவந்த “காவாலியா” பாடல் மிகவும் பிரபலமடைந்தது. அதனை தொடர்ந்து நேற்று இத்திரைப்படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலான “Hukum” பாடல் வெளிவந்தது. இந்த பாடலின் தொடக்கத்தில் ரஜினிகாந்த், “இங்க நான்தான் கிங், நான் வச்சதுதான் ரூல்ஸ், அந்த ரூல்ஸை நான் அப்பப்போ மாத்திக்கிட்டே இருப்பேன். அதை கப் சிப்ன்னு கேட்டு ஃபாலோவ் பண்ணனும். அதை விட்டுட்டு எதுவும் அடாவடித்தனம் பண்ணனும்ன்னு நினைச்ச, உன்னை கண்டந்துண்டமா வெட்டி கலைச்சு போட்டிடுவேன்” என்று ஒரு வசனத்தை பேசுகிறார்.
அதனை தொடர்ந்து பாடலில் “பேரை தூக்க நாலு பேர், பட்டத்தை பறிக்க நூறு பேர்” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வரிகள் விஜய்யை மறைமுகமாக தாக்கியுள்ளதாக பலர் கூறி வருகின்றனர். அதே போல், “குட்டி சுவத்தை எட்டிப்பார்த்தா உயிரை கொடுக்க கோடி பேரு” என்று சில வரிகள் வருகிறது. அதாவது ரஜினிகாந்திற்கு அத்தனை கோடி பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பதை குறிப்பிடுவதற்காக இந்த வரி எழுதப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது டிவிட்டர் பக்கத்தில் மேற்குறிப்பிட்ட இந்த வரிகளை கலாய்க்கும் விதமாக ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார். அதாவது ஒரு திரைப்படத்தில் “அண்ணன் பிரச்சனைன்னு வந்துட்டா உயிரையே கொடுப்பார்” என்று வடிவேலுவை ஒருவர் பாராட்டி கூற வடிவேலுவின் உயிரை எடுக்க ஒருவர் ஓடி வருவாரே, அந்த காமெடி காட்சியை பதிவேற்றியுள்ளார். இது ரஜினி ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிறைக்காவலர்:
பாடல் வரி..
குட்டிச்சுவத்த எட்டிப்பாத்தா
உசுர கொடுக்க கோடி பேரு. pic.twitter.com/OPMb8H1oEx— Blue Sattai Maran (@tamiltalkies) July 17, 2023





