- Advertisement -
Homeபொழுதுபோக்குஹீரோ ஹீரோயினா பார்க்கவே முடியலே, அக்கா தம்பி மாதிரி தான் தெரியுது - ஹாய் படம்...

ஹீரோ ஹீரோயினா பார்க்கவே முடியலே, அக்கா தம்பி மாதிரி தான் தெரியுது – ஹாய் படம் குறித்து கலாய்த்து விமர்சனம் செய்த பிரபலம்!

- Advertisement -

அறிமுக இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாரா கவின் பிரபு விடிவி கணேஷ் சத்யன் ஆதித்யா காவியா அறிவுமணி உள்ளிட்டோர் நடித்த படம் ஹாய். இந்த படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, படத்தில் ஹீரோ கவின் காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறார்.

அதனால் அவருடைய திருமணம் தள்ளிப்போகிறது. கவின் மிகவும் வெகுளியானவர் என்பதால் யாராவது அவரிடம் ஏதாவது சொல்லிவிட்டால் அதையே மனதில் வைத்துக் கொண்டு அதன்படி நடந்து கொள்வார். இப்படிப்பட்ட கேரக்டரை எந்த பெண்ணுக்கும் பிடிக்கவில்லை. அதனாலேே அவருக்கு திருமணம் நடக்காமல் தள்ளிப் போகிறது. ஒரு கட்டத்தில் பிரச்சனை பெரிதாகி விட வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு கவின் வந்து விடுகிறார்.

- Advertisement -

அதே நேரத்தில் ஹீரோயின் நயன்தாராவிற்கும் விருப்பம் இல்லாமல் ஒருவருடன் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்கிறார்கள். அதனால் வீட்டை விட்டு நயன்தாராவும் சென்னைக்கு வந்து விடுகிறார். இப்படித்தான் கவின் நயன்தாரா இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். அதன்பிறகு எப்படி இருவரும் ஒன்று சேர்ந்தார்கள் என்பதுதான் படத்தின் கதை.

ஆனால் படம் ஆரம்பிக்கும் போதே கடைசியில் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்பது தெரிந்து விடுகிறது. அப்படி இருக்கும்போது அவர்கள் இருவரும் எப்படி சந்தித்தார்கள் எப்படி காதலித்தார்கள் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதை தான் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் படத்தில் அப்படி எந்த சுவாரஸ்யமான விஷயமும் இல்லை. முதல் பாதி கூட ஓரளவுக்கு பரவாயில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் கதை ரொம்பவே நாடகத்தனமாக இருக்கிறது.

- Advertisement -

ஒரு கட்டத்திற்கு மேல் கதை நகராமல் சீரியல் பார்ப்பது போல இருந்தது. ஒரு பெண் ஊரிலிருந்து ஓடி வந்தால் சென்னையில் அவளுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இயல்பாக காட்டி இருக்க வேண்டும். ஏதாவது ஒரு வேலை செய்து கஷ்டப்பட்டு சாப்பாட்டுக்காக போராடி ஒரு சிறிய இடத்தில் தங்கி வாழ்வது போல விஷயங்களை காட்டி இருக்கலாம். ஆனால் படத்தில் அப்படி காட்டாமல் நாடகத்தனமாக இருக்கிறது. அது மட்டுமின்றி கவின் நயன்தாராவை ஹீரோ ஹீரோயினாக யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை. அக்கா தம்பி மாதிரி தான் தெரிகிறது.

இதுபோன்ற படங்களை காப்பாற்றுவது கதை காமெடி பாடல்கள் தான். ஆனால் அதுவும் இந்த படத்தில் கை கொடுக்கவில்லை. இந்த படத்தை ஒரு பீல்குட் திரைப்படமாக இருக்கும் என்று பார்த்தால் படம் பீல்குட் சீரியலாக இருக்கிறது. இந்த படத்தை போய் பாருங்க என்று சொல்ல முடியாது. தப்பித்தவறி போயிட்டீங்களா? ஒன்றும் பெரிய தப்பு இல்லை என ப்ளூ சட்டை மாறன் ஹாய் படம் குறித்து இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்