- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை சமந்தா நடித்த மா இண்டி பங்காரம், 10 நாட்களில் இத்தனை கோடிகள் வசூலா?...

நடிகை சமந்தா நடித்த மா இண்டி பங்காரம், 10 நாட்களில் இத்தனை கோடிகள் வசூலா? அடேங்கப்பா, தயாரிப்பாளராக லாபம் மட்டுமே அவருக்கு இத்தனை கோடிகளா?

- Advertisement -

தமிழில் பல படங்களில் நடித்தவர் நடிகை சமந்தா. கத்தி தெறி மெர்சல் போன்ற படங்களில் நடிகர் விஜயுடன் நடித்திருக்கிறார். மேலும் தங்க மகன் 10 எண்றதுக்குள்ள அஞ்சான் நீதானே என் பொன்வசந்தம் இரும்புத்திரை சீமராஜா பாணா காத்தாடி யு டர்ன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழைப் போலவே தெலுங்கிலும் சமந்தா முன்னணி நாயகியாக வலம் வருகிறார். ஏராளமான தெலுங்கு படங்களில் அவர் நடித்திருக்கிறார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்த அவர் 4 ஆண்டுகளில் அவரை விட்டு பிரிந்து விவாகரத்து பெற்றார். அதன்பிறகு இப்போது 2வது திருமணம் செய்துள்ளார்.

- Advertisement -

சிட்டாடல் வெப் சீரிஸ் ராஜ் நெடிமூர் என்பவரை சமந்தா 2வது திருமணம் செய்த நிலையில் தற்போது சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் சமந்தா மாறியிருக்கிறார். அவரது சொந்த நிறுவனம் தயாரிப்பில் தற்போது வெளியான படம் மா இண்டி பங்காரம். இந்த படம் 10 நாட்களில் அபாரமான வசூலை குவித்துள்ளது.

தெலுங்கு பட இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் நடிகை சமந்தா கதையின் நாயகியாக நடித்த படம் மா இண்டி பங்காரம். கடந்த 19ம் தேதி வெளியான இந்த தெலுங்கு படம் தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியானது. இந்த படத்தில் கதையின் நாயகியாக சமந்தாவே நடித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு உலகளவில் இந்த படத்தின் மொத்த வசூல் 73 கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 2 தினங்களில் 7 கோடி ரூபாய்க்கு மேல் அதிகமாக வசூலித்து தற்போது 80 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த படத்தின் மூலம் இதுவரையில் ரூ. 25 கோடிக்கும் அதிகமான லாபம் தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் மட்டும் இந்த படம் 2 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலை கடந்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் 55 கோடி ரூபாய், வெளிநாடுகளில் 25 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த 2026ம் ஆண்டில் தெலுங்கு திரையுலகில் சில முன்னணி ஹீரோக்களின் படங்கள் கொடுக்காத லாபத்தை கதாநாயகியாக தயாரிப்பாளராக இந்த படத்தில் நடிகை சமந்தா கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்