அரண்மனை 4 மதகஜராஜா படங்களை தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் கேங்கர்ஸ் படம் சில தினங்களுக்கு முன் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படங்களுக்கு பிறகு இயக்குனர் சுந்தர் சி மூக்குத்தி அம்மன் 2 படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மனாக மீண்டும் நடிக்கிறார்.
மேலும் இந்த படத்தில் அபிநயா இனியா ரெஜினா கசாண்ட்ரா துனியா விஜய் யோகிபாபு கருடா ராம் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார். இந்த படம் ரூ. 120 கோடி பட்ஜெட்டில் ஒரு பான் இந்தியா படமாக உருவாகிறது. சுந்தர் சி இயக்கத்தில் முதல் பெரிய பட்ஜெட் படமும் இதுதான் என்றும் கூறப்படுகிறது.
மூக்குத்தி அம்மன் 2 படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஆனால் குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் லோகோவும் இந்த படத்தின் விளம்பர போஸ்டர்களில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
அதனால் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இந்த 3 நிறுவனங்களும் சேர்ந்து தயாரிக்கின்றதா என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தை முழுவதும் தயாரிக்க செலவு செய்வது வேல்ஸ் பிலிம் நிறுவனம் மட்டுமே. சென்டிமென்ட் காரணமாக அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் பெயர் இருந்தால் படம் பெரிய சக்சஸ் ஆகும் என்று சிலர் கூறியதால், அந்த லோகோ போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.
குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் லோகோ இருக்கும் போது, நடிகை நயன்தாரா எதுவும் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்பதற்காக ரவுடி பிக்சர்ஸ் லோகோவும் போஸ்டரில் இடம் பிடித்துள்ளது. ஆனால் உண்மையில் படத்தை தயாரிக்க போவது ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் தயாரிப்பு நிறுவனம் மட்டும்தான் என்பது உறுதியாகி உள்ளது.
இதே போல் தக்லைஃப் படத்தை தயாரித்த நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மட்டும்தான். அந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியீடு செய்யும் ரெட் ஜெயின்ட் மூவிஸ் லோகோவும், படத்தின் இயக்குனர் பர்ஸ்ட் காபி அடிப்படையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் லோகோவும் போஸ்டரில் உள்ளது. உண்மையில் தக்லைஃப் படத்தின் தயாரிப்பாளர் கமல் மட்டுமே என்பதும் தெரிய வந்துள்ளது.





