- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிகாந்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்... இணையத்தில் சண்டையிடும் சூப்பர் ஸ்டார் - உலக நாயகன் ரசிகர்கள்......

ரஜினிகாந்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்… இணையத்தில் சண்டையிடும் சூப்பர் ஸ்டார் – உலக நாயகன் ரசிகர்கள்… கமலின் ரியாக்சன் என்ன…

- Advertisement -

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றி மூலம் உற்சாகத்தில் இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நெல்சன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான இந்த திரைப்படம், வசூலின் மிகப்பெரிய சாதனையை புரிந்தது. கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்க்கு மேல் படம் வசூல் செய்ததால், மகிழ்ச்சி அடைந்த தயாரிப்பு நிறுவனம் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு காரினை பரிசாக வழங்கியது.

ஜெயிலர் திரைப்படம் கொடுத்து வெற்றியினால் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதற்கான சூட்டிங் பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், டப்பிங் வேலைகளையும் அவர் முடித்துள்ளார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து, ஜெய் பீம் படம் இயக்குனர் ஞானவேல் உடன் ரஜினிகாந்த் கைகோர்த்து இருக்கிறார். என்கவுன்டர்றிற்கு எதிராக எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடிக்கிறாராம். முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் இமயம் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளாராம்.

இது போக வில்லனாக பகத் பாசிலும், மலையாள நடிகை மஞ்சு வாரியரும் படத்தில் இருக்கிறார்களாம். தெலுங்கில் இருந்து ராணாவையும் ஞானவேல் தேர்வு செய்துள்ளாராம். தரமான நட்சத்திரங்கள் படத்தில் இருப்பதால், இதற்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார்.

- Advertisement -

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த தகவல் வெளியானதிலிருந்து, ட்விட்டரில் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கும் உலகநாயகன் ரசிகர்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் சண்டை நிலவி வருகிறது. இந்த நிலையில், சைமா விருதுகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற உலகநாயகன் கமல்ஹாசனிடம், ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இணையும் திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த கமல், என்னுடைய ரசிகர் லோகேஷ் கனகராஜ், எனது நண்பர் ரஜினிகாந்த்திற்கு படம் இயக்குவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இது யாருக்கும் புரிய மாட்டேங்குது. எங்களுக்குள் இருக்கும் போட்டி ஆரோக்கியமானது. ரஜினியும் நானும் நெருங்கிய நண்பர்கள். எங்களைப்போல இதற்கு முன்பு இருந்த தலைமுறையினரிடத்தில் இல்லை என்று பேசினார். கமலின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்