நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள படம் தலைவர் 173. இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சொந்தமாக தயாரிக்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். சாய் பல்லவி ஷோபனா போன்றவர்கள் இந்த படத்தில் நடிக்க உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்த தலைவர் 173 படத்தில் முதலில் இயக்குனராக கமிட் செய்யப்பட்டவர் இயக்குனர் சுந்தர் சி. ஆனால் அவர் திடீரென அந்த படத்தை விட்டு விலகியதால் டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி கமிட் செய்யப்பட்டார். வரும் 27ம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்த்த நிலையில், இப்போது சிபி சக்ரவர்த்தியும் இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டார்.
இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் முக்கிய காரணம் நடிகர் ரஜினிகாந்த் தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வழக்கமாக கேங்ஸ்டர் படங்களில் தாதா ஆகவும் பெரிய டான் ஆகவும் என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாகவும் நடித்து நடித்து அலுத்து விட்டதால் காமெடி கதைக்களத்தில் பேமிலி சப்ஜெக்ட்டில் நடிக்க ரஜினி விரும்பினார்.
அதனால்தான் முதலில் சுந்தர் சி தேர்வு செய்யப்பட்டார். பிறகு அவர் விலகியதால் சிபி சக்ரவர்த்தி கமிட் ஆனார். அவர் இந்த படத்துக்கான ஸ்கிரிப் முழுவதும் ரெடி செய்து முடித்து விட்டார். இந்த சூழலில் இயக்குனர் சிபி சக்ரவர்த்தியை நேரில் அழைத்து ரஜினி பேசியிருக்கிறார்.
அப்போது துரந்தர் 2 படம் போல நாம் இந்த படத்தை மாற்ற வேண்டும். தேசப்பற்று கொண்ட கதைக்களமாக படம் மாற வேண்டும். 1000 கோடி 2000 கோடி ரூபாய் என வசூலிக்கும் பெரிய பான் இந்தியா படமாக இதை மாற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார். இது பேமிலி சப்ஜெக்ட் படம். அதை அப்படி மாற்ற முடியாது.
அப்படி திடீரென மாற்றினால் படத்தின் அடிப்படை கதைக்களமே மாறிவிடும். மேலும் தலைவர் 173 படத்துக்கான அனைத்து ஸ்கிரிப்ட் பணிகளையும் நான் முடித்து விட்டேன். காமெடி காட்சிகள் மட்டுமே சேர்க்க வேண்டும் என்று சிபி சக்ரவர்த்தி கூறிய நிலையில், துரந்தர் 2 படம் போலவே இது இருக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் பிடிவாதமாக கூறியிருக்கிறார். அவர் தந்த நெருக்கடியால் கடுப்பான சிபி சக்ரவர்த்தி இந்த படமே வேண்டாம் என்று வெளியேறியதாக வலைப்பேச்சு ஜெ பிஸ்மி ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார்.





