உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி. கார்த்திக் ரம்பா நடித்த இந்த முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து மேட்டுக்குடி முறைமாமன் அன்பே சிவம் அருணாசலம் கிரி ரெண்டு வின்னர் என பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக மாறிய இயக்குனர் சுந்தர் சி இப்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திர இயக்குனராக மாறி இருக்கிறார்.
கடந்த 1990களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்புவை சுந்தர் சி காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் குஷ்பு திரைப்பபடங்களை சின்னத்திரை தொடர்களை தயாரிக்கவும் செய்கிறார்.
துவக்கத்தில் அரசியல் ஆர்வத்தில் திமுகவில் இணைந்த நடிகை குஷ்பு ஒரு கட்டத்தில் திடீரென காங்கிரஸ்க்கு மாறினார். அப்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் தேர்தல் களத்தில் பணியாற்றிய நடிகை குஷ்பு ஒரு கட்டத்தில் திடீரென பாஜக கட்சிக்கு தாவினார். கடந்த சில ஆண்டுகளாக பாஜக அரசியல் களத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.
சினிமாவை இயக்குவது மட்டுமின்றி நடிகராகவும் உள்ள இயக்குனர் சுந்தர் சி தொடர்ந்து பல படங்களில் நடித்தும் வருகிறார். அவர் நடித்த தலைநகரம் சண்டை ஆயுதம் செய்வோம் தீ முரட்டுக்காளை வீராப்பு நகரம் மறுபக்கம் அரண்மனை படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெற்றன.
சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு நீண்ட ஆண்டுகளுக்கு பின் நடித்த கேங்கர்ஸ் படம் வெளியானது. இந்த படம் 4 நாட்களில் ரூ. 9 கோடி வரை வசூலித்துள்ளது. தியேட்டர்களில் பெரிய வசூல் இல்லை என்றாலும் நான் தியேட்டரிக்கல் என்ற முறையில் டிஜிட்டல் ரைட்ஸ் சேட்டிலைட் ரைட்ஸ் ஆடியோ ரைட்ஸ் போன்வற்றில் பெரிய கணிசமான லாபத்தை கேங்கர்ஸ் பட தயாரிப்பாளருக்கு தந்திருக்கிறது.
இதையடுத்து இயக்குனர் சுந்தர் சி, நடிகை குஷ்புவை அழைத்த கேங்கர்ஸ் பட தயாரிப்பு நிறுவனம், அவர்களது 25 ஆண்டு திருமண நாளை கொண்டாட ஐரோப்பியன் நாடுகளுக்கு சுற்றுலா செல்ல ஏற்பாடுகளை செய்துள்ளது. 25 நாட்களுக்கு மேல் அவர்கள் ஐரோப்பிய நாடுகளில் தங்கி திருமண நாளை கொண்டாட அனைத்துவித ஏற்பாடுகளையும் செய்து அதற்கான முழு செலவையும் அந்நிறுவனமே ஏற்றுக்கொண்டுள்ளது. அதனால் நட்சத்திர தம்பதி ஐரோப்பிய நாடுகளில் தங்களது திருமண ஆண்டை கொண்டாட தயாராகி வருகின்றனர்.





