- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது நாத்தனாரை கொடுமைப்படுத்தினாரா நடிகை ஹன்சிகா மோத்வானி? மும்பை போலீசார் பதிலளிக்க கோர்ட் உத்தரவு!

தனது நாத்தனாரை கொடுமைப்படுத்தினாரா நடிகை ஹன்சிகா மோத்வானி? மும்பை போலீசார் பதிலளிக்க கோர்ட் உத்தரவு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இன்னொரு குஷ்புவாக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இந்தி தெலுங்கில் பல படங்களில் நடித்த அவர் தமிழிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றார். தமிழில் விஜய் தனுஷ் ஜெயம் ரவி சிவகார்த்திகேயன் சிம்பு உதயநிதி ஸ்டாலின் சித்தார்த் போன்றவர்களுடன் நடித்தார்.

குறிப்பாக வேலாயுதம் அரண்மனை அரண்மனை 2 மாப்பிள்ளை மான் கராத்தே குலேபகாவலி எங்கேயும் காதல் போகன் மனிதன் புலி ரோமியோ ஜூலியட் வாலு பிரியாணி தீயா வேலை செய்யணும் குமாரு ஒரு கல் ஒரு கண்ணாடி சிங்கம் 2 என பல படங்களில் ஹன்சிகா மோத்வானி நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குஷ்பு போலவே இவர் இருந்ததால் சின்ன குஷ்பு என்றும் ரசிகர்கள் கூறினர்.

கடந்த 2020ம் ஆண்டில் தொழில் அதிபர் சோஹைல் கத்துரியா என்பவரை ஹன்சிகா திருமணம் செய்தார். அதன் பிறகும் சினிமாவில் அவர் நடித்து வருகிறார். ரவுடி பேபி காந்தாரி படங்களில் நடித்துள்ள அவர் நிஷா என்ற தெலுங்கு வெப் தொடரிலும் நடித்து வருகிறார். ஹன்சிகாவின் சகோதரர் பிரசாத் மோத்வானிக்கும் அவரது மனைவி முஸ்கான் நான்சிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இப்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹன்சிகா மற்றும் அவரது அம்மா மோனா மோத்வானி இருவரும் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இருந்தும் அவர்கள் அதற்கு தடையாக இருப்பதாகவும் முஸ்கான் நான்சி மும்பை அம்போலி போலீசில் புகார் செய்தார். அவரது புகார் அடிப்படையில் மும்பையில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில் ஹன்சிகா அவரது சகோதரர் பிரசாந்த் மற்றும் தாயார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கிலிருந்து ஹன்சிகாவும் அவரது தாயாரும் கடந்த பிப்ரவரி மாதம் மும்பை அமர்வு கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றனர். மேலும் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் இருவரும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் முஸ்கான் நான்சி தங்கள் மீது சொன்ன அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர்கள் மறுத்திருந்தனர்.

மேலும் முஸ்கானுக்கும் தனது சகோதரனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு 2021ம் ஆண்டு முதல் நடந்து வருவதாகவும் ஆனால் 2022ம் ஆண்டில் பரஸ்பர விவாகரத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கபட்டதாகவும் ஹன்சிகா குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்த மனு குறித்து மும்பை போலீசார் பதில் அளிக்க உத்தரவிட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதன் பிறகு இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூலை 3ஆம் தேதிக்கு கோர்ட் ஒத்தி வைத்துள்ளது.

சற்று முன்