- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னைய தயவு செய்து மன்னிச்சிடுங்க- விஜய் ரசிகர்களை கையெடுத்து கும்பிட்ட குக் வித் கோமாளி புகழ்!...

என்னைய தயவு செய்து மன்னிச்சிடுங்க- விஜய் ரசிகர்களை கையெடுத்து கும்பிட்ட குக் வித் கோமாளி புகழ்! ஏன்னு தெரிஞ்சிக்கனுமா?

- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான மற்றும் மக்களின் மனதை மிகவும் கவர்ந்த ஒரு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது “குக் வித் கோமாளி”. முதல் சீசனுக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாவது சீசன்கள் ஒளிபரப்பட்டது.

அதனை தொடர்ந்து தற்போது நான்காவது சீசன் கலகலப்பாக சென்றுகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்று பெயர் எடுத்து “குக் வித் கோமாளி”, டிஆர்பி ரேட்டிங்கில் பிக் பாஸிற்கு அடுத்த இடத்தில் வலம் வந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதில் முதல் சீசனில் இருந்து பாலா, புகழ், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி போன்றோர் ரசிகர்களின் உள்ளங்கவர்ந்த கோமாளிகளாக இருக்கின்றனர். சிவாங்கி தற்போது கோமாளியில் இருந்து குக் ஆக ஆகியுள்ளார். புகழ் சமீப காலமாக பல திரைப்படங்களில் நடித்து வருவதால் போன சீசன் வரவில்லை. எனினும் தற்போது சீசன் 4-ல் புகழ் இடம்பெற்றுள்ளார்.

எனினும் பாலா இந்த சீசனில் இடம்பெறவில்லை. அதே போல் மணிமேகலை சில வாரங்களே இடம்பெற்றார். அதன் பின் அவரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தினாலும் தற்போது புதிய கோமாளிகளாக இருக்கும் ஜிபி முத்து, மோனிஷா ஆகியோர் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் புகழ், விஜய்யின் “கில்லி” பட கெட்டப்பில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, அதில், “அனைத்து தளபதி ரசிகர்கள் சார்பாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யாரும் தவறாக நினைக்கவேண்டாம். அனைத்தும் கற்பனையே” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

அதாவது கோமாளிகள் வழக்கம்போல் பல கெட்டப்களில் வருவார்கள். அதில் இந்த வாரம் புகழ் “கில்லி” பட விஜய் கெட்டப்பில் வந்திருந்தார். ஆதலால்தான் இவ்வாறு ஒரு பதிவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

சற்று முன்