- Advertisement -
சில ஆண்டுகளுக்கு முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய தேனிசை தென்றல் தேவா கூறியதாவது, முதலில் நான் இசை அமைத்த சில படங்களில் சி தேவா என்று தான் எனது பெயர் இருந்தது. அப்போது இசையமைப்பாளர் சி தேவா என்கிற வார்த்தை கீழே இறங்குவது போல் உள்ளதாக கூறிய நடிகர் ராமராஜன், தேவா என்று பெயரை மாற்றுமாறு கூறினார். அதன் பிறகு தான் தேவா என்று பெயரை மாற்றியதால் மிகப்பெரிய இசை அமைப்பாளராக எனது வாழ்க்கையில் இசை பயணத்தில் மாற்றம் ஏற்பட்டது என்று நெகிழ்ச்சியாக தேனிசை தென்றல் கூறியிருக்கிறார்.





