- Advertisement -
ஒருமுறை நேர்காணலில் பேசிய தேனிசை தென்றல் தேவா கூறியதாவது, நான் என்னுடைய இசையில் உருவான பாடல்களுக்கு காப்பிரைட்ஸ் கேட்க மாட்டேன். அதன் மூலம் எனக்கு பணம் தான் வரும். ஆனால் புகழ் வராதே? என்னோட பாட்டை இப்போ வர்ற படத்துல போடுறாங்க. அதனால நான் திரும்பி வரேன். 2கே கிட்ஸ் வரைக்கும் என்னை தெரியுது. பணத்தை விட எனக்கு இதுதான் முக்கியம். பணத்தை விட குழந்தைகள் என் பாடல்களை இசையை ரசிக்கணும். அந்த சந்தோஷம் எவ்வளவு கோடி கொடுத்தாலும் கிடைக்காது என்று தேனிசை தென்றல் தேவா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





