- Advertisement -
Homeபொழுதுபோக்குஇசையமைப்பாளரிடம் வாய்ப்பு கேட்ட நடிகை தேவயானி… என்ன இவங்களும் பாடகியா மாறப் போறங்களா? - அட...

இசையமைப்பாளரிடம் வாய்ப்பு கேட்ட நடிகை தேவயானி… என்ன இவங்களும் பாடகியா மாறப் போறங்களா? – அட இதை யாருமே எதிர்பார்க்கலையே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை பாடியவர்கள் பாடகர் திப்பு மற்றும் பாடகி ஹரிணி. இந்த இசை தம்பதியின் மகன்தான் இன்று தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். அவர் இசையமைத்து பாடிய கட்சி சேர மற்றும் ஆச கூட ஆகிய 2 பாடல்கள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங் ஆனது. பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து சாய் அபயங்கர் இசையமைத்த டியூட் பல்டி ஆல்பங்களும் பெரிய அளவில் ரசிகர்கள் மனங்களை கவர்ந்தன. அதைத் தொடர்ந்து இப்போது திரைப்படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு விழாவில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் விருந்தினராக பங்கேற்றார். அப்போது அந்த நிகழ்ச்சியில் நடிகையும் தேவயானியும் கலந்துக்கொண்டார். அப்போது மேடையில் நடிகை தேவயானி பேசுகையில் இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்தார்.

நடிகை தேவயானி அப்போது கூறியதாவது, முதலில் சாய் அபயங்கரின் அம்மா மற்றும் அப்பாவின் ஆகியோரின் ரசிகை நான். இப்போது சாய் அபயங்கரின் ரசிகையாகவும் மாறி விட்டேன். என் மகளும் அவரது ரசிகைதான். என் மகள் இனியா நன்றாக பாடுவாள். அவளுக்கு உங்களுடன் பாட வேண்டும் என்பதுதான் கனவு.

- Advertisement -

அதனால் ஏதாவது வாய்ப்பு இருந்தால் என் மகளுக்கு பாடுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று நேரடியாக கேட்டுக்கொண்டார். அவர் பேசியதை கேட்டு அங்கிருந்த பார்வையாளர்கள் பலரும் ஆச்சரியப்பட்டனர். தனது மகளுக்காக ஒரு பிரபல சீனியர் நடிகை இப்படி வளரும் இசையமைப்பாளரான இளைஞரின் யதார்த்தமாக வேண்டுகோள் விடுத்தது தேவயானியின் பரந்த குணத்தை வெளிப்படுத்தியது.

நடிகை தேவயானி இயக்குனர் ராஜகுமாரன் நட்சத்திர ஜோடிக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் இனியா நன்றாக பாடக்கூடியவர். டிவி சேனல் ஒன்றில் பாட்டு போட்டு நிகழ்ச்சியிலும் அவர் கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. விரைவில் தனது மகள் இனியா நடிக்கும் படத்தை இயக்க போவதாக அவரது தந்தை இயக்குனர் ராஜகுமாரன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்